பிரபல ரிவியில் ஜூலிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க…

0
2168

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவுக்கு பிறகு சினிமா, சின்னத்திரை வாய்ப்புகள் ஜூலிக்கு மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

இவர் தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் கோகுல் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக ஜூலிக்கு 3 மாதத்திற்கு மொத்தமாக 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

அதாவது மாதம் ஒன்றுக்கு தலா ரூ 10 லட்சம். இது உண்மையிலேயே ஜூலிக்கு பெரிய வளர்ச்சிதான்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்து மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தற்போது ஒரு நல்ல நிலைக்கு தான் வந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனை அவர் தக்க வைக்க வேண்டும் என்றால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

சமுத்திரகனி கூறியதை போல சிறிது காலம் அமைதியாக இருப்பது நல்லது. செய்வாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.