சினிமாவை விஞ்சும் திருட்டு: ஓடும் லாரியில் குதித்து கொள்ளை!! (வீடியோ)

0
332

ஸ்வீடன் நாட்டில் உள்ள கார்கோ நிறுவனத்திலிருந்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் லாரியில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

அவற்றை பாதி வழியில் செல்லும் போது பொருட்கள் காணாமல் போகின்றன. லாரியில் எலக்ட்ரானிக் பொருட்களான கம்பியூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இதனால் நிறுவனமானது லாரியில் கேமராவை பொருத்தியது. இதனால் திருடர்களை எளிதில் கண்டறியலாம் எனக் கருதினர். அந்த வீடியோவை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஹாலிவுட் படத்தையும் மிஞ்சும் வண்ணம் 80 கி.மீ வேகத்தில் செல்லும் லாரியில் காரிலிருந்து திருடர்கள் இரண்டு பேர் குதிக்கின்றனர்.

லாரியில் இருந்த பொருட்களை திருடி காரில் இருந்த நபரிடம் கொடுக்கின்றனர். பின்னர் லாரி சென்று கொண்டு இருக்கும் போதே பின்னால் வந்து கொண்டிருக்கும் காரில் குதிக்கின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ மூலம் திருடர்களை போலீசார் கைது செய்தனர்.

சினிமாவில் வருவது போல ஓடும் காரிலிருந்து சென்று கொண்டிருக்கும் லாரியில் இருக்கும் பொருட்களை திருடிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.