சூனியக்காரிகள் என எண்ணி 5 பெண்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்..!! (வீடியோ)

0
919

ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் மாவட்டத்தில் சூனியக்காரிகள் என்று சந்தேகப்பட்டு 5 பெண்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரமாக சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி மதுபூர் கிராமத்தில் சிபா சிங் என்பவர் தனது மனைவி ராதாமணியுடன் இணைந்து சூனிய வேலைகள் செய்து வந்தாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

சிபா கிராமத்தில் உள்ள ஒருவரின் மீது சூனியம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் சூனியத்தால் கிராமத்தில் இதுவரை ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தாக கிராம மக்கள் சந்தேகித்துள்ளனர்.

இதனால் சிபா சிங்கை அவரின் வீட்டிலிருந்து இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக அடித்தனர்.

சிபா கிராமத்தில் உள்ள 5 பெண்கள் இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறினார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அந்த பெண்களையும் மரத்தில் கட்டி வைத்து இரக்கமின்றி கடுமையாக தாக்கினர்.

சிபா சிங்கை காப்பாற்ற வந்த அவரது மனைவி ராதாமணியும் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராதாமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூனியம் போன்ற மூடநம்பிக்கையால் பெண்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.