“நடிப்பை விட்டு ஒரேடியாக விலகி அமெரிக்கா சென்றது ஏன்?: ‘மயக்கம் என்ன’ கதாநாயகி ரிச்சா விளக்கம்!

0
350

மயக்கம் என்ன படத்தில் நடித்த ரிச்சா கங்கோபாத்யாய் நடிப்பிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாக அறிமுகமான ரிச்சா, அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர்.

தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் மயக்கம் என்ன படத்தில் நடித்தவர் பிறகு சிம்பு நடித்த ஒஸ்தி படத்திலும் நடித்தார்.

பிறகு வரிசையாக தெலுங்குப் படங்களில் நடித்தவரைப் பற்றி சில வருடங்களாகத் தகவல்கள் எதுவும் இல்லை.

இந்நிலையில் தான் நடிப்பை விட்டு விலகியுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் ரிச்சா.

இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது: திரைப்படங்களை விட்டு விலகி 5 வருடங்கள் ஆன பிறகும் நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேனா எனக் கேட்பதைப் பார்த்து வெறுப்பாக உள்ளது.

நான் என் வாழ்வின் புதிய பயணத்தில் உள்ளேன். நடிப்பு குறித்த எந்த லட்சியமும் எனக்குக் கிடையாது.

திருமணம் செய்துகொள்வதற்காக நடிப்பை விட்டு விலகியுள்ளீர்களா என்கிற கேள்வியும் வெறுப்படைய வைக்கிறது.

வாழ்க்கையில் ஒருவருக்கு தொழில் சார்ந்த வேறு விருப்பங்கள் இருக்கக்கூடாதா? என்று கூறியுள்ளார்.

மயக்கம் என்ன படம் தெலுங்கில் மிஸ்டர். கார்த்திக் என டப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எழுதியுள்ள ரிச்சா, என் திரையுலக வாழ்வில் இது முக்கியமான படம். இயக்குநர் செல்வராகவனுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது வசிக்கும் ரிச்சா, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துள்ளார்.

richa2richa22richa7richa88richa_parents

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.