பாலியல் துஸ்பிரயோகப்படுத்தி சிறுவன் கொலை; ஒருவர் கைது

0
574

15 வயதுடைய சிறுவன், பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று, கிரியெல்ல பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் (04) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், அப்பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிரியெல்ல கரந்தன ஜினரதன வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்ற கிரியெல்ல கரந்தன பிரதேசத்தைச் சேர்ந்த ஹேவாகே யேவான் லக்மால் என்ற சிறுவனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த சிறுவன் கடந்த மாதம் 25ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பில் சிறுவனின் தாயார், கிரியெல்ல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சிறுவனுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, இங்கிரிய இறப்பர் தோட்டத்தின் அருகில் உள்ள ஓடை ஒன்றில் இருந்து, குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபருக்கும் சிறுவனுக்கும் இடையில் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்ததாகவும், இவர்கள் இருவரும் பல இடங்களுக்குச் சென்று வந்ததாகவும், சிறுவன் மீது குறித்த நபர், பாலியல் துஷ்பிரயோகம் நடத்தியுள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபரும் சிறுவனும், இங்கிரிய பிரதேசத்தில் வீடொன்றில் தங்கி இருந்து வந்த வேளை, சிறுவனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிறுவனை ஓடை அருகில் இருந்த கடப்பாரையின் அருகில் போட்டுள்ளதாகவும், விசாரணையின்போது மேலும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.