ரஜினியின் கையைப்பிடித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி!

0
364

சென்னையில் இன்று நடைபெற்ற தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்தார்.

தினத்தந்தி பத்திரிகையின் பவளவிழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மாேடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மேடையில் இருந்தனர்.

மேடைக்குக் கீழே முதல் வரிசையில் நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு மற்றும் பின்வரிசையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் இருந்தனர்.

முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த்தின் கையைப் பிடித்து நலம் விசாரித்தார், அருகே நடிகர்கள் பிரசாந்த், சரத்குமார் இருந்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.