யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து…6பேர் பலி…45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்)

0
2261

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

இதேவேளை காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, மதுரங்குளி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது, குறித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

23167562_2229840213710229_6227210701629921782_n23319327_10212839844184067_3053954934438038911_n23231330_10212839844424073_1828744526308015607_n19247574_2053307914890689_8117828714465956477_n23319206_10212839844824083_2504280625481584353_n23319206_10212839844824083_2504280625481584353_n

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.