அமெரிக்கா: டெக்சாஸ் மாகாண சர்ச்சில் துப்பாக்கி சூடு – 27 பேர் பலி – (வீடியோ)

0
756

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாப்டிஸ்ட் சர்ச்சில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகினர். மேலும் 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாப்டிஸ்ட் சர்ச்சில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகினர். மேலும் 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள பாப்டிஸ்ட் சர்ச்சில் நேற்று காலை ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். இதனால் சர்ச்சில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இந்த கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகினர். மேலும், 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பலரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை சுட்டு கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

460CF61D00000578-5052163-At_least_27_people_have_been_shot_inside_a_Texas_church_after_a_-a-101_1509916450517460D1EB700000578-5052163-Special_agents_from_ATF_s_Houston_Field_Division_San_Antonio_Fie-a-102_1509916450537460D1EC300000578-5052163-The_shooting_happened_at_the_First_Baptist_Church_of_Sutherland_-a-104_1509916450587460DAF3500000578-5052163-The_shooter_was_killed_after_the_brief_foot_chase_into_Guadalupe-a-113_1509916451125460DBC2600000578-5052163-image-a-120_1509917304078

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.