“ரூ.70-க்காக 10-ம் வகுப்பு மாணவிகளின் ஆடையை களையச் செய்த தலைமை ஆசிரியர்”

0
398

மத்தியப்பிரதேச மாநிலத்தின் தாமோ என்ற இடத்தில் உள்ள பள்ளியில் மாணவிகளின் ஆடையை தலைமை ஆசிரியர் களையச் செய்த கொடூரம் சனிக்கிழமை நடந்தது.

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் ரூ.70 காணாமல் போனதாக தலைமை ஆசிரியரிடம் அம்மாணவி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த வகுப்பு முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், அதே வகுப்பில் பயிலும் சக மாணவிகள் இருவரிடம் சோதனை செய்ய அவர்களின் ஆடையைக் களையுமாறு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

அந்தப் பணத்தை தாங்கள் இருவரும் திருடியதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புக்கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.

அதற்கு சம்மதிக்காத காரணத்தால் அவ்வாறு செய்யச் சொன்னதாக பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரியின் கவனத்துக்கு இவ்விவகாரம் சென்றுள்ளது.

எனவே இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட கல்வித்துறை அதிகாரி உறுதியளித்தார்.

<

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.