கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை படுகொலை செய்து அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு : காதலி உட்பட 7 பேர் கைது

0
517

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவரை காதலியே தனது ஆண் நண்பர்களை வைத்து படுகொலை செய்து உடலை அடையாறு ஆற்றில் வீசிய சம்பவம் சைதாப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக 7பேரை போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை கோத்தபேடு அன்னை தெருவை சேர்ந்தவர் அம்மு.

இவரது மகன் ராமச்சந்திரன் (29), வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த செல்வி (25) என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது.

அடிக்கடி செல்வி வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராமச்சந்திரன் குடிபோதையில் செல்வி வீட்டிற்கு சென்று அவரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு செல்வி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் கள்ளக்காதலியை அடித்து உதைத்து, வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து விட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து செல்வி தனது ஆண் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். உடனே, நேற்று முன்தினம் நள்ளிரவு 6 வாலிபர்கள் ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்து அவரை அழைத்து சென்றுள்ளனர்.

அதன்பின் நேற்று காலை வரை ராமச்சந்திரன் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரனின் தாய் அம்மு, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை அழைத்து சென்ற சைதாப்பேட்டையை சேர்ந்த சரத் (25), பிரகாஷ் (23), சந்தோஷ் (22), மணி (24), சரண்ராஜ் (30), தேவராஜ் (23) ஆகிய 6 பேைர பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. ராமச்சந்திரனை மது அருந்த அடையாறு ஆற்றுக்கு இடையே உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அழைத்து சென்று, அங்கு வைத்து அவரை கடுமையாக தாக்கி படுகொலை செய்து உடலை மேம்பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் வீசிவிட்டு வந்ததாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கள்ளக்காதலி செல்வி உட்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடல் வீசப்பட்ட இடத்தில் தேடி பார்த்தனர்.

ஆனால் ராமச்சந்தரன் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் சைதாப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.