தொடர் மழை எதிரொலி… சென்னையில் பஸ், ரயில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு!- (வீடியோ)

0
354
சென்னை: சென்னையில் டிசம்பர் 2015ல் பெய்தது போல மழை கொட்டித் தீர்ப்பதால் நகரில் பஸ், ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை எதிரொலியாக சென்னையில் விட்டு விட்டு 3 நாட்களாக மழை பெய்தது.
இன்று காலை முதல் வெளில் சுள்ளென்று சுட்டெரித்ததால் மழையில் இருந்து தப்பித்தோம் என்று மக்கள் நினைத்தனர்.

ஆனால் அப்படி வெயில் சுள்ளென சுட்டதே இந்த பேய் மழைக்காகத் தான் என்பது தெரியாமல் போய்விட்டது.

xchennai-rain3466-02-1509642226.jpg.pagespeed.ic._b5v2h-QNw
சென்னையில் மாலை 5 மணி முதல் பரவலாக நகரின் பல பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்க்கிறது.
2015 டிசம்பரில் பெய்த மழை போல இன்றைய மழை நிலவரம் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மாலை முதல் பெய்த
மழையில் நுங்கம்பாக்கத்தில் மட்டும் 6 செ.மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. மாலை முதல் மழை வெளுத்துக் கட்டுவதால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

மாநகரப் பேருந்து போக்குவரத்தும் தடை பட்டுள்ளது, இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் பெரும்பாலான மக்கள் பேருந்து நிறுத்தத்திலேயே தவித்து வருகின்றனர்.

இதே போன்று செங்கல்பட்டு, மறைமலைநகர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டித் தீர்க்கிறது.
இதனால் மின்சார ரயில் போக்குவரத்தும் தடை பட்டுள்ளது. தற்போதைய நிலைக்கு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மட்டுமே நல்ல முறையில் கைகொடுக்கிறது.

மேலும் கால்டாக்சிகளும் மழை காரணமாக வரத் தயங்குவதால் நகர் முழுவதும் ஆங்காங்கே மக்கள் சாலைகளில் செய்வதறியாது கைபிசைந்து நிற்கின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.