ஒசாமாவுடன் ஹிலரி கிளின்டன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா ?

0
240

கூற்று : வெள்ளை மாளிகையில் விருந்தினராக ஒசாமா பின்லேடன் சென்றதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

ரஷ்ய சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அந்தப் புகைப்படம் போலியானது. வெள்ளை மாளிகையில் ஒசாமா பின்லேடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவே இல்லை.

வெள்ளை மாளிகையில் அப்படியொரு நிகழ்வு நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்திதொடர்பாளரான மரியா சாக்கரேவா, கடந்த திங்களன்று ஒரு ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமெரிக்க அரசைப் பற்றியும் பல்வேறு விஷயங்களில் அந்நாட்டிற்கு ஆதரவாக செயல்படும்படி அமெரிக்கா செல்வாக்கு செலுத்திவருவது குறித்தும் பேசியுள்ளார்.

” பின்லேடன் வெள்ளை மாளிகையில் எப்படி விருந்தாளியாக நடத்தப்பட்டார் என்பதை இந்த அற்புதமான பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் காட்டுவதை நினைவுகூரவும் ” என அவர் கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரஷ்ய டிவிட்டர் கணக்குகளில் கடந்த வருடம் வலம்வந்தன.

98557007_russia_quotepic.pngஇந்தப் புகைப்படங்கள் வெள்ளை மாளிகையில் ஒசாமா எப்படி நடத்தப்பட்டார் எனக் காட்டுவதாக மரியா சாக்கரேவா கூறியுள்ளார்.

இது நிச்சயம் போலியானது. ஏனெனில், கடந்த 2004 ஆம் ஆண்டு இசைவாணர் சுபாசிஷ் முகர்ஜியை ஒரு நிகழ்வில் ஹிலரி சந்தித்த உண்மையான புகைப்படத்தை கீழே காணலாம். இந்த புகைபபடத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஒசாமா உருவம் பொதிக்கப்பட்டுள்ளது.

98564669_329af30d-9ab5-4853-9efd-e24a716c7be5இசைவாணர் சுபாசிஷ் முகர்ஜியை ஒரு நிகழ்வில் ஹிலரிசந்தித்தார்.

_90532665_rc_cps_story_bannerஅமெரிக்காவைச் சேர்ந்த உண்மையை பரிசோதிக்கும் தளமான ஸ்நோப்ஸ் செய்த ஆய்வில் இந்த புகைப்படமானது FreakingNews.com எனும் வலைதளம் நடத்திய போட்டோஷாப் போட்டியில் தயாரிக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது.

_98565341_binladen.png

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.