“எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேசினால் காரியத்தை சாதிக்கலாம்!”

0
385

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேசினால் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மேஷ ராசிக்காரர்களா நீங்கள்…. 
இவர்களிடம் எப்போதும் சற்று கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பேசுவது நல்லது. இல்லையெனில் சட்டென்று கோபம் வந்துவிடுமாம். இவர்களை பாராட்டி பேசினால் இவர்களுக்குப் பிடிக்கும். ஆனால் வாக்குவாதம் செய்தால் இவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ரிஷப ராசியா நீங்க….
இவர்கள் பேச்சு அன்பாகவும், கனிவாகவும் இருக்கும். இவர்களிடம் அன்பாகப் பேசி எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம்.

மிதுன ராசிக்காரர்களிடம்…
எப்போதும் அளவோடு மட்டுமே பேச வேண்டும். அளவுக்கு மீறிப் பேசினால், உங்களை அதிகம் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

கடக ராசியா….நீங்க
அன்பாகவும் அடக்கமாகவும் இருப்பார்கள். இவர்களிடம் பாசமாகப் பேசினால் போதும் எல்லா உதவியும் கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரரா நீங்கள்…
பொறுமையாகவும், நேர்மையாகவும் பேசினால் நமக்கு தேவையான உதவியைப் பெறலாம். இல்லையெனில் இவர்களிடம் எளிதில் காரியத்தை சாதிக்க முடியாது.

கன்னி ராசிக்காரர்களிடம்..
இந்த ராசிக்காரர்களுடன் எப்போதும் நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது. இவர்களால் நிறைய ஆதாயம் கிடைக்கும். ஆனால் இவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகப் பேச வேண்டும்.

துலாம் ராசியா நீங்க.. 
ஜாலியாக பேசுவார்கள். கம்பீரமாக நடந்து கொள்வார்கள். அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் இவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

விருச்சிக ராசிக்காரர்களே…..
பேசியே மயக்குபவர்கள் இவர்கள். அன்பாக அனுசரித்துப் பேச வேண்டும். இவர்களிடம் அன்பாக பேசினால் அனைத்தையும் பெறலாம். ஆனால் கோபமாக பேசினால் சுனாமியாக மாறிவிடுவார்கள்.

தனுசு ராசியா… 
இவர்களிடம் அன்பாக பேசி காரியத்தை சாதித்துக்கொள்ளலாம். அவர்களை நான்கு வார்த்தை பாராட்டிவிட்டால் போதும் மதிமயங்கி விடுவார்கள். அன்புக்கு அடிமையானவர்கள் தனுசு ராசிக்காரர்கள்.

மகர ராசிக்காரர்கள்…
அதிகம் புலம்புவார்கள். அப்படியே நம்ப வேண்டாம். இவர்களின் இயல்பு அது. இவர்களிடம் எச்சரிக்கையாகவே பேச வேண்டும். இவர்களிடம் ஒரு காரியத்தை சாதிப்பது கொஞ்சம் கஷ்டம் தாங்க….

கும்பமா உங்க ராசி…
பல விஷயங்களை அறிந்திருப்பார்கள். அதை வெளிக்காட்டும் விதமாகவே பேசுவார்கள். இவர்கள் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொன்னால் போதும் நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம்.

மீன ராசிக்காரர்களே..
ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பார்கள். இவர்கள் அனைவரையும் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலாக இருப்பார்கள். இவர்களிடம் மிகவும் கவனமாக யோசித்துப் பேச வேண்டும். இல்லையெனில் வாய் கொடுத்து மாட்டிக்கொள்வோம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.