மனிதனுக்கும் உராங்குட்டானுக்கும் பிறந்தவரா? ‘குரங்கு பெண்’ உடல் 150 ஆண்டுக்கு பிறகு அடக்கம்

0
265

மனிதனுக்கும்   உராங்குட்டானுக்கும்  பிறந்த பெண்ணின் உடல்,   இறந்து 150 ஆண்டுகள்  கழித்து அவரது சொந்த நாடான மெக்சிகோவில் அடக்கம்  செய்யப்பட்டுள்ளது.  1834ம் ஆண்டு  பிறந்தவர். வித்தியாசமான மரபணு பிரச்னையால் பாதிக்கப்பட்டார்.  இதனால் அவரது முகம் மற்றும் உடல் முழுவதும் கருகருவென அடர்ந்து முடி வளர்ந்தது.  மனித குரங்கு போல்  உடல் முழுவதும்   முடி இருந்ததால்,   ‘Ape woman ’ (குரங்கு பெண்) என்றே அழைக்கப்பட்டார்.
மெக்சிகோ: மனிதனுக்கும்   உராங்குட்டானுக்கும்  பிறந்த பெண்ணின் உடல்,   இறந்து 150 ஆண்டுகள்  கழித்து அவரது சொந்த நாடான மெக்சிகோவில் அடக்கம்  செய்யப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் சினலோவா பகுதியை சேர்ந்தவர் ஜூலியா பஸ்த்ரானா.  1834ம் ஆண்டு  பிறந்தவர். வித்தியாசமான மரபணு பிரச்னையால் பாதிக்கப்பட்டார்.  இதனால் அவரது முகம் மற்றும் உடல் முழுவதும் கருகருவென அடர்ந்து முடி வளர்ந்தது.  மனித குரங்கு போல்  உடல் முழுவதும்   முடி இருந்ததால்,   ‘Ape woman ’ (குரங்கு பெண்) என்றே அழைக்கப்பட்டார்.

இவர் தனது பிரச்னைக்கு பல நாடுகளிலும் சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், தனது 20வது வயதில் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தும் தியோடோர் லென்ட் என்பவருடன் காதல் மலர்ந்தது.

அவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து உலகம் முழுவதும் பயணித்து பல வேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்விப்பதை வாடிக்கையாக்கி கொண்டனர். இதற்கிடையே ஜூலியா கர்ப்பமானார்.

இவரை போலவே, இவரது ஆண் குழந்தையும் உடல் முழுவதும் அடர்ந்த முடிகளுடன் பிறந்தது. எனினும்,  3 நாட்களில் அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. அதன்பிறகு, காய்ச்சலால் ஜூலியா தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார்.

சிகிச்சைகள் பலனின்றி 1860ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி இறந்தார். அதன் பிறகு அவரது உடல் நார்வேயின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக எடுத்து கொள்ளப்பட்டது. ஜூலியாவின் உடல் இங்குள்ள ஆராய்ச்சி  கூடத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரது உடலை தங்களிடம்   ஒப்படைக்க வலியுறுத்தி சினலோவா அரசு, மற்றும் தனியார் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. அதன்படி, ஜூலியா  பஸ்த்ரானா இறந்து 150 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது உடலை ஆஸ்லோ பல்கலைக்கழகம் சினலோவா  (Sinaloa)  அரசிடம் சமீபத்தில் ஒப்படைத்தது.

அங்கு அவரது உடல் ரோமன் கத்தோலிக்க மத வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. ஜூலியா பஸ்த்ரானா பற்றி பல டாக்டர்கள் பலவிதமான கருத்துகளை கூறியுள்ளனர். ‘மனித ஜோடிகள் இணைப்பால் இப்படி ஒருவர் பிறந்திருக்க வாய்ப்பு இல்லை.

அவர் அனேகமாக மனிதன்  உராங்குட்டான் கலப்பால் தான்  பிறந்திருக்க வேண்டும்’ என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

Previous articleஉலகில் உள்ள 9 மிகப்பெரிய சாதனைகள்!!!
Next article‘Nadeesha Hemamali

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.