கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்த மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த கணவன்

0
390

கள்ளக்காதலனுடன் தினமும் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த மனைவியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த நபரொருவரை பெங்களூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பெங்களூர் மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் அதிகாரி அப்துல் கஜாத் , கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ரெட்டி.

இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது சகோதரியின் மகளான பிரேமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தையடுத்து, இருவரும் பெங்களூர் காடுகோடி பகுதியில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

வெங்கடேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் பிரேமா வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

அப்போது அதே காடுகோடியை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருடன் பிரேமாவிற்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் வெங்கடேஷ் ரெட்டி வீட்டில் இல்லாத போது தினமும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பிரேமா அவரது கள்ளக்காதலனான ஸ்ரீநாத்துடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டனர்.

இந்த தகவல் அறிந்த வெங்கடேஷ் ரெட்டி, இது தொடர்பாக பெங்களூர் மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்பேரில் அவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் பிரேமா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவரை மீட்டு வெங்கடேஷ் ரெட்டியுடன் வாழ்வதற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின்னரும் பிரேமா தனது கள்ளக்காதலை விடவில்லை.

தொடர்ந்து ஸ்ரீநாத்துடன் தொடர்பு வைத்திருந்ததுடன், வழமைப் போல வெங்கடேஷ் ரெட்டி இல்லாத நேரத்தில் இருவரும் சந்தித்து உல்லாசம்அனுபவித்து வந்துள்ளனர்.

இதை அயலவர்கள் மூலம் அறிந்த வெங்கடேஷ் ரெட்டிக்கு மனைவி மீது ஆத்திரம் ஏற்பட்டதையடுத்து, மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தனது நண்பர்களான சுரேஷ், பாபு ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் தனது மனைவி பிரேமாவிடம் சொந்த ஊருக்கு சென்று வரலாம் என்று அழைத்துள்ளார்.

அதற்கு பிரேமா சம்மதம் தெரிவித்ததும், இருவரும் ஒரு பைக்கில் சிந்தாமணி என்ற பகுதியை நோக்கிச் சென்றனர். மற்றொரு பைக்கில் நண்பர்கள் இருவரும் சென்றுள்ளனர்.

சிந்தாமணி அருகே சென்றபோது, திட்டமிட்டப்படி பைக்கை நிறுத்திய வெங்கடேஷ் ரெட்டி, தனது மனைவியிடம் அன்பாய் பழகுவது போல் நடித்து மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதன்போது மனைவியின் கை மற்றும் கால்களை வெங்கடேஷ் ரெட்டியின் நண்பர்கள் பிடித்து கொலைக்கு உதவியுள்ளனர்.

பின்னர் சடலத்தை அப் பகுதியின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைத்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பிய வெங்கடேஷ் ரெட்டி, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாகவும், இந்நேரத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் வெங்கடேஷின் பேச்சை அவரது சகோதரி நம்பவில்லை. அவர் மீது சந்தேகம் ஏற்படவே, பெங்களூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் இது குறித்து விசாரித்து வந்தனர். வெங்கடேஷின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததையடுத்து, இது தொடர்பாக வெங்கடேஷை பொலிஸார் கண்காணித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த வாரம் வெங்கடேஷனை கைது செய்து விசாரித்தபோது, பயத்தில் தான் செய்த கொலையை ஒப்பு கொண்டார்.

அதாவது, தான் இல்லாதபோது கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் அவருடனான கள்ளக்காதலை கைவிடும்படி வற்புறுத்தியும் கேட்கவில்லை.

இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை சிந்தாமணி பகுதிக்கு அழைத்து செல்லும் வழியிலேயே கொலை செய்து, சடலத்தை புதைத்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற பொலிஸார், அவற்றை தோண்டி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கில் சுரேஷ் மற்றும் பாபு தலைமறைவாகவுள்ளனர் எனவும் அவர்களை பெங்களூர் பொலிஸார் தேடி வருகின்றனர் என்றும் பொலிஸ் அதிகாரி அப்துல் கஜாத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.