நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா

0
226

எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, நீச்சல் உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.

‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரமுடன் நடித்தார். தெலுங்கில், தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது, தமிழில் ‘நரகாசுரன்’ படத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் ஸ்ரேயா இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்குள்ள பன்டா கடல் பகுதியில் கடலுக்குள் ‘டூபீஸ்’ நீச்சல் உடையில் கடல் கன்னி போல் நீந்தியதை புகைப்படமாக எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

கடலுக்கு அடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞர் அனுப்ஜகட் இந்த படங்களை எடுத்துக்கொடுத்துள்ளார். ஸ்ரேயா நீச்சல் உடையில் நீந்துவது போல் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

201710311244526150_1_shriya3._L_styvpfவழக்கமாக இது போல் கடலுக்கு அடியில் டூபிஸ் உடையுடன் நீந்தும் படத்தை ஹாலிவுட் நடிகைகள் தான் அதிகமாக வெளியிடுவார்கள். ஸ்ரேயா திடீர் என்று ஏன் இது போன்ற படங்களை எடுத்து வெளியிட்டார் என்பது தெரியவில்லை.

தற்போது படவாய்ப்புகள் அதிகமாக இல்லை. என்றாலும் தான் இளமையாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்காகவே இப்போது இந்த படங்களை ஸ்ரேயா வெளியிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி உள்ளனர்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.