குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் திருமணம்

0
164

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வரும் காளி வெங்கட், ஜனனி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் காளி வெங்கட். சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இவருடைய நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. அக்கதைக்கு முக்கியத்துவமாகவும் இவருடைய கதாபாத்திரம் அமைத்திருந்தது.

காளி வெங்கட்டிற்கும், ஜனனிக்கும் சென்னையை அடுத்துள்ள திருப்போரூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

201710311038359542_1_kaali2._L_styvpfபெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும், அவருக்கு நெருக்கமான திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

மிகவும் எளிமையாக நடைபெற்ற காளிவெங்கட், ஜனனி திருமணத்திற்கு சமூக வலைத்தளத்தில் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.