வீதியில் காணப்­பட்ட 4,11,000 ரூபா பணப்­பையை கண்­டெ­டுத்த ஆட்டோ சாரதி; நேர்மைக்­காக வர்த்­தகர் வழங்­கிய ஒரு இலட்சம் ரூபா­வையும் நிரா­க­ரித்தார்

0
253

 

வீதியில் கண்­டெ­டுத்த 4,11,000 ரூபா பணத்தை கண்டெடுத்த முச்­சக்­கர வண்டி சார­தி­யான விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் கண்டி பொலி­ஸாரின் ஊடாக உரி­ய­வரை கண்­டு­பி­டித்து ஒப்­ப­டைத்த சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

கண்டி நகரில் –முச்­சக்­க­ர­வண்டி செலுத்தும் இளை­ஞ­ரான விஸ்­வ­நாதன் பஞ்­ச­சீலன் தனது முச்­சக்­க­ர­வண்­டியை கண்டி நகரில் அமைந்­துள்ள ஸ்ரீ விக்­கி­ரம ராஜ­சிங்க மாவத்த வீதியில் நிறுத்த முற்­பட்­ட­போது அநா­த­ர­வான நிலையில் காணப்­பட்ட பார்சல் ஒன்றைக் கண்­டெ­டுத்­துள்ளார்.

அதனை சந்­தே­கத்தில் அவர் பிரித்து பார்த்த போது அத­னுள் 4,11,000 ரூபா பணம் இருப்­பதை கண்டு அவர் அதனை உரி­ய­வ­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­காக கண்டி பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்குச் சென்று பொலிஸ் உய­ர­தி­கா­ரி­க­ளிடம் விப­ரத்தை கூறி, அதனை அதன் உரி­மை­யா­ளரைக் கண்டு பிடித்து ஒப்­ப­டைக்க தான் விரும்­பு­வ­தாகத் தெரி­வித்து பணத்தை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்ளார்.

பொலிஸார் பெரும் முயற்­சி­களைக் கொண்டு உரி­ய­வரை கண்டு பிடித்­தனர். அவர் காலி ஹினி­தும பிர­தே­சத்தைச் சேர்ந்த பிர­பல வர்த்­தகர் ஒரு­வ­ராவார்.

குறித்த வர்த்­தகர் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் தமது பிறந்த தினத்தை முன்­னிட்டு ஸ்ரீ தல­தா­மா­ளி­கைக்கு வழி­பா­டு­களில் கலந்து கொள்ளச் சென்­றுள்ளார்.

தமது வழி­­பாடு பூஜைகள் நிறை­வ­டைந்த பின்னர் அன்­றைய தினம் இரவை கண்­டியில் கழிக்க முற்­பட்டு விக்­கி­ர­ம­ரா­ஜ­சிங்க மாவத்­தையில் வாகன தரிப்­பி­டத்தில் தமது காரை நிறுத்தி விட்டு முச்­சக்­க­ர­வண்டி சாரதி ஒரு­வ­ரிடம் இரவு வேளை தங்­கு­வ­தற்­கான சிறந்த விடு­தி­களை கேட்­டுள்ளார்.

விப­ரங்­களை அறிந்து கொண்ட வர்த்­தகர் கண்டி வாவிக்­கரை அருகில் உள்ள விடுதி ஒன்­றுக்குச் சென்று அங்கு தனது காரை நிறுத்­தி­விட்டு தனது பணப்­பையை தேடி­யுள்ளார். ஆனால், அது இருக்­க­வில்லை.

இதே­வேளை, அவர் கண்­டிக்குச் செல்லும் வழியில் நிட்­டம்­பு­வயில் பகல் உண­வுக்­காக விடுதி ஒன்­றுக்கு சென்­றி­ருந்தார்.

தான் அங்­குதான் பணப்­பையை தவற­விட்­டி­ருக்­கலாம் எனக் கருதி அங்கு விரைந்து சென்று விசா­ரித்த போது விடு­தியின் சி.சி.டி.வி கெம­ராவை பார்த்­த­போது குறித்த வர்த்­தகர் பணப்­பை­யுடன் அங்­கி­ருந்து வெளி­யே­று­வது தெரிய வந்­துள்­ளது.

இதனால் அப்­பணம் தமக்கு கிடைக்கப் போவ­தில்லை என்று கருதி ஹினி­து­மைக்கு திரும்பி விட்டார்.

விஸ்­வ­நாதன் பஞ்­சீலன் கண்­டெடுத்த பணப் பொதியில் உரி­மை­யா­ளரின் தேசிய அடை­யாள அட்­டையும் காணப்­பட்­டுள்­ளது.

இதனைக் கொண்டு பொலிஸார் உரியவரை ஹினி­தும பொலிஸார் மூலம் தொடர்பு கொண்டு கண்­டிக்கு வர­வ­ழைத்து விசா­ரணை செய்த பின்னர் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்­ப­தி­காரி உரி­ய­வ­ரிடம் விஸ்­வ­நாதன் பஞ்­சீலன் மூலம் கைய­ளிக்கச் செய்­தனர்.

முச்­சக்­க­ர­வண்டி சாரதியான விஸ்வநாதனின் இந்த நேர்மையான செய்கையை பொலிஸ் அதிகாரிகளும் குறிப்பிட்ட வர்த்தகரும் பாராட்டியதோடு, உரிமையாளரான வர்த்தகர் அவரின் நேர்மைக்காக 100,000 இலட்சம் ரூபா பணத்தை பரிசாக தொடுத்த போதும் அவர் அதனை வாங்க மறுத்து விட்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.