ஆரவ்வுடன் நடிக்க மறுத்த ஓவியா

0
135

 

‘பிக் பொஸ்’ நிகழ்ச்­சியின் டைட்டில் வின்­ன­ரான ஆரவ் ஏற்­க­னவே ‘ஓ காதல் கண்­மணி’, ‘சைத்தான்’ உட்­பட சில படங்­களில் சிறிய கேரக்­டர்­களில் துணை நடி­க­ராக முகம் காட்­டி­யவர்.

தற்­போது பிக்பாஸ் டைட்­டிலை வென்ற பிறகு கதா­நா­ய­க­னாக நடிக்க முயற்சி செய்து வரு­கிறார்.

201708111123567375_1_Actress-Oviya._L_styvpfசிம்­புவை வைத்து ‘சிலம்­பாட்டம்’ படத்தை இயக்­கிய சர­வணன், கௌதம் கார்த்­திக்கை வைத்து சிப்பாய் என்ற படத்தை இயக்­கினார்.

ஏறக்­கு­றைய 3 வரு­டங்­க­ளுக்கு மேலாக அந்தப் படம் முடங்­கியே கிடக்­கி­றது.

இந்­நி­லையில் ஆரவ்வை ஹீரோ­வாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்­சியில் இருக்­கிறார் சர­வணன்.

ஏற்­கெ­னவே ‘சிலம்­பாட்டம்’ படத்தை இயக்­கிய சர­வணன் அதன் பிறகு எத்­த­னையோ ஹீரோக்­களை வைத்து படம் இயக்க முயற்சி செய்தார்.

எது­வுமே வொர்க்கவுட்­டா­க­வில்லை. கௌதம் கார்த்திக், லட்­சுமி மேனன் நடிப்பில் தொடங்­கப்­பட்ட ‘சிப்பாய்’ படமும் முடங்­கி­விட்­டது.

எனவே ஆரவை வைத்து இயக்கும் படத்தை பர­ப­ரப்­பாக பேச­வைக்க வேண்டும் என்ற எண்­ணத்தில் ஓவி­யாவை கதா­நா­ய­கி­யாக நடிக்க அணு­கி­யுள்ளார்.

ஆரவ் ஹீரோ என்று சொன்­ன­துமே கதையைக் கூட கேட்­காமல் நடிக்க மாட்டேன் என்று சொல்­லி­விட்­டாராம் ஓவியா. நம்பிக்கை துரோகத்தை இன்னும் மறக்கவில்லை போலிருக்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.