மொபைல் வாங்கி தந்த காதலனுக்கு செருப்பு மாலை அணிவித்த காதலி குடும்பத்தினர் – (வீடியோ)

0
562

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலிக்கு மொபைல் வாங்கி தந்த காதலன் மற்றும் அவனது உறவினருக்கு செருப்பு மாலை அணிவித்து தாக்குதல் நடத்திய கிராமத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிஜ்னூர் மாவட்டத்தில் இஸ்லாமாபாத் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ். இவரது மகள் விகாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

201710291600057764_1_garland-3._L_styvpfகாதலியிடம் நினைத்த நேரத்தில் பேச வேண்டும் என்பதற்காக விகாஸ் அந்த பெண்ணுக்கு புது மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, விகாசும், அவரது உறவினர்களும் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர்களது வருகையை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் விகாஸ் மற்றும் அவரது உறவினர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து, தாக்குதல் நடத்தினர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து விகாசின் சகோதரர் குமார் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சந்திரபிரகாஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.