என்னை பாலத்காரம் செய்ய முயன்றனர்: ஜூலி போலீஸில் பரபரப்பு புகார்!!

0
75

 

நடிகை நித்யா மேனனின் மேக்கப் கலைஞராக பணியாற்றுபவர் ஜூலி. இவர் போலீஸாரிடன் பாலத்கார புகார் ஒன்றை அணித்துள்ளார்.

நடிகை நித்யா மேனனுக்கு மெர்சல் படத்தில் மேக்கப் கலைஞராக பணியாற்றி ஜூலி தற்போது நித்யா மேனனி அடுத்த படமான பிராணாவிலும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஜூலி எர்ணாகுளம் ஐஜியிடம் பரபரப்பு புகார் ஒன்ரை அளித்துள்ளார். அந்த புகார் பின்வருமாறு, நான் பிராணா படத்தில் நித்யா மேனனுக்கு மேக்கப் கலைஞராக உள்ளேன். கொச்சி அருகே உள்ள சலீம் வில்லாவில் தங்கியிருந்தேன்.

கடந்த 15 ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்து என் அறைக்கு திரும்பிய போது என் அறை திறந்து கிடந்தது. அறையில் இருந்த விலை உயர்ந்த மேக்க பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக வில்லா உரிமையாளரிடம் புகார் அளித்தேன். சிறிது நேரத்தில் படத்தின் தயாரிப்பு நிர்வாகியான பாதுஷா உள்பட சிலர், அறைக்குள் வந்து என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.

நான் கூச்சல் போட்டதால் ஓடிவிட்டனர். பின்னர் மேலும் சிலர் வந்து என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி எர்ணாகுளத்தில் கொண்டு விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஜூலியின் இந்த புகாரை படக்குழு மறுத்துள்ளது. ஜூலி மது அருந்திவிட்டு ரகளை செய்ததால் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அனுப்பினோம் என்று படத்தின் இயக்குனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.