கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை காண்பித்ததால் குழந்தை போன்று கதறி அழுதேன் – மேற்கிந்திய அணியின் முன்னாள் மசாஜ் ஊழியர் நீதிமன்றில் சாட்சியம்

0
864

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை தன்னிடம் காண்பித்தபோது தான் குழந்தை போன்று கதறி அழுததாக அவ்வணியின் பெண் மசாஜ் ஊழியராக பணியாற்றிய யுவதி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

லியனே ரஸல் எனும் இந்த யுவதி, அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சிமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஒருநாள் சர்வதேச உலக கிண்ணப் போட்டிகள் நடை பெற்றபோது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினருக்கான மசாஜ் ஊழியராக பணி யாற்றியவர் லியனே ரஸல்.

அப்போது ஒருநாள் மேற்கிந்திய அணியினரின் அறைக்கு தான் சென்றபோது, தனக்கு கிறிஸ் கெய்ல் ஆணுறுப்பைக் காட்டினார் என லியனே ரஸல் தெரிவித்திருந்தார்.

45A6378F00000578-5014761-image-a-12_1508897977625அவுஸ்திரேலியாவின் தி ஏஜ் மற்றும் கென்பரா டைம்ஸ் பத்திரிகைகள் இது தொடர்பான செய்தி களை வெளியிட்டிருந்தன.

மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்த கிறிஸ் கெய்ல், அச் செய்திகளை வெளியிட்ட பத்திரிகை களுக்கு எதிராக மானநஷ்ட வழக்குத் தொடுத்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் இவ் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.

இவ் விசாரணையின்போது, லியனே ரஸல் சாட்சியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘துவாய் (டவல்) ஒன்றைத் தேடி நான் சென்றபோது கிறிஸ் கெய்லை நான் எதிர்கொண்டேன். அப்போது ‘என்ன தேடுகிறீர்கள்’ என கிறிஸ் கெய்ல் கேட்டார். நான் ‘ஒரு டவல்’ என பதிலளித்தேன்.

அதையடுத்து, கிறிஸ் கெய்ல் தனது இடுப்பிலிருந்த டவலை கழற்றி கீழிறக்கினார். அவரின் ஆணுறுப்பின் மேல் அரைப்பகுதி எனக்குத் தெரிந்தது.

இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன். ஒரு குழந்தை போன்று கதறி அழுதேன்’ எனத் தெரிவித்தார்.

mie2பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியொன்றின் பின்னர் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவரை மதுபானம் அருந்த அழைத்ததுடன், வெட்கப்பட வேண்டாம் பேபி எனக் கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின்னரே மசாஜ் ஊழியர் லியனே ரஸல் ஊடகங்களிடம் தொடர்புகொண்டு தனக்கு ஏற்பட்ட அவலத்தைத் தெரிவித்தார்.

இதையடுத்தே பத்திரிகைகளுக்கு எதிராக கிறிஸ் கெய்ல் வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் கெய்ல் தொடர்பான தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையானவை எனவும் பொது மக்களின் கரிசனையை கருத்திற்கொண்டு இச் செய்திகளை வெளியிட்டதாகவும் தி ஏஜ் மற்றும் கென்பரா டைம்ஸ் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

கிறிஸ் கெய்ல் தொடுத்த மானநஷ்ட வழக்கு விசாரணை தொடர்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.