புதிய SMART அடையாள அட்டை அறிமுகமானது : அது தொடர்பான முழு தகவல்கள் இதோ

0
668

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்படுகின்ற, புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கச்சிதமான புதிய தேசிய அடையாள அட்டை (SMART Card), உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி. நாவின்னவினால் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இப் புதிய தேசிய அடையாள அட்டை, பன்னிரண்டு இலக்கங்களைக் கொண்ட அடையாள அட்டை இலக்கத்தையும், சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் (International Civil Aviation Organization – ICAO) தர நிர்ணயங்களுக்கு அமைய எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், இயந்திரத்தினால்  வாசிக்கக் கூடிய குறியீட்டுக் கீற்றையும் (Barcode) கொண்டதாக இருக்கும்.

இதில் பெயர், பிறந்த இடம், முகவரி, பால் முதலான தகவல்கள்/ விபரங்கள் மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும் என்பதுடன், இதில் அடையாள அட்டை உரிமையாளரின் கையொப்பத்தை உட்சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இக் கச்சிதமான அட்டை (SMART Card) சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரநிர்ணயங்களுக்கு அமைவாக இருப்பதுடன், இதன் மூலம் பொது மக்களுக்கு மிக இலகுவாகவும், விரைவாகவும் சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.

இக் கச்சிதமான அட்டை (SMART Card) அறிமுகம் செய்யப்படுவதினூடாக, இதுவரை பாவிக்கப்பட்டு வரும் தேசிய அடையாள அட்டை இரத்தாக மாட்டாதென்பதுடன், இன்று தொடக்கம் திணைக்களத்திடம் முன்வைக்கபடுகின்ற விண்ணப்பப்படிவங்களுக்காக மட்டும் இக் கச்சிதமான அட்டையை (SMART Card) விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலதிக தகவல்களுக்கு இந்த இணையத்தள முகவரிக்குள் செல்லவும்

http://www.drp.gov.lk/Templates/Artical%20-%20Tamil%20new%20smart%20card.html

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.