85 ஆம் ஆண்டுகளில் அகதியாய் வெளிநாட்டுக்கு வந்த தமிழர்கள் பட்ட துன்பங்கள்….!! : (சுவிஸில் அகதி முகாமில் எடுக்கப்பட்ட அரிய வீடியோ காட்சிகள்)

0
618

• 85 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு அகதியாய் வந்த தமிழர்கள் என்ன பாடுபட்டார்கள், அகதியாய் வந்தவர்கள் ஆரம்ப காலங்களில் எவ்வளவு கஸ்ரங்களுக்கு மத்தியில் மொழி தெரியாமல் வேலை தேடினார்கள், அகதி முகாம்களில் எப்படியிருந்தார்கள் என்பதையெல்லாம் பிரதிபலிக்கும் அரிய வீடியோ காட்சிகள்.

• நாட்டில இருந்து வெளிநாடு வந்தவர்கள் எவ்வளவு அழகாகவும், ஜடாமுடியுடனும் இருந்தார்கள் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வசதியாக வாழ்வதாகவே எல்லோரும் “கற்பனையில்” நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் பட்ட, படும் கஸ்ரம் பலருக்கு புரிவதில்லை.

இதனை பிரதிபலிக்கும் விதமாக 1986ம் ஆண்டளவில் சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநிலத்தில் உள்ள சொலிகோபன் எனும் இடத்தில் அமைந்திருந்த “அகதி முகாமில்” படமாக்கப்படட திரைப்படம் இது.

மேற்படி அகதி முகாமில் மொத்தமாக ஐம்பது பேர் வசித்து வந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.

1986ம் ஆண்டளவில் சுவிஸ் உட்பட ஐரோப்பிய நாடெங்கும் அகதிகளின் வருகை காரணமாக இனத்துவேசம் ஓரளவு காணப்பட்ட போதிலும், சுவிஸ் நாட்டு வயதானவர்கள், தமிழர்களை பராமரித்து சாதாரண (பண்ணை) வேலை வழங்க பின் நிற்க்கவில்லை. ஆயினும் அன்றைய கால கட்டத்தில் “ஒரு நாள் சம்பளம்” நான்கு அல்லது ஐந்து பிராங் மட்டுமே.. ஆகக்கூடிய சம்பளம் ஏழு சுவிஸ் பிராங்.

இருப்பினும் இந்த சம்பளத்தை பெறுவதுக்காகவேனும் காலையில் எழுந்து வீடுவீடாக சென்று வேலை கேட்பதும், மாலையில் அகதி முகாம் வந்து, வலைப்பந்து விளையாடி, முடிவெட்டிக் குளித்து, சாப்பிட்டு, எல்லோரும் ஒரு அறையில் இருந்து (ஐம்பது ராப்பன் கொடுத்து) படம் பார்ப்பதும், ஊரில் இருந்து உறவுகளிடம் இருந்து வரும் கடிதங்களை பார்த்து சந்தோசம் அடைவதும், மாலை நேரங்களில் உதைபந்து விளையாட்டு, ரெஸ்ர்லிங் போன்றவற்றை பார்ப்பதும், நித்திரையுமாகவே வாழ்க்கை..

இலங்கை புதினங்களை கிழமையில் ஒருமுறை வரும் பத்திரிகையை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்வதுடன், “தமிழீழ தகவல் நடுவத்தால்” ஒளிபரப்பாகும் செய்திகளை, தினம்தோறும் பதிவு செய்து அதனை மீண்டும் கேட்டு, எழுதி விளம்பர பலகையில் ஒட்டி அனைவரும் விழுந்தடித்து பார்ப்பதே வழமை. (இப்போது போல் அக்காலத்தில் கொம்பியூட்டர் வசதி இல்லை)

அகதிமுகாமில் வைத்து கிழமைக்கு கிழமை தரும் பணத்தை பெறுவதுக்காகவே வரிசையில் நிற்பதும், கடைக்கு அழைத்து சென்று பொருட்க்கள் வாங்குவதும், எப்போதாவது ஒருநாள் உயிர்க்கோழியை வாங்கி உரித்து சமைத்து சந்தோசமாக சாப்பிடுவதும், யாருடைய பிறந்த நாளையாவது சந்தோசமாக கொண்டாடும் போது மட்டுமே, விருந்து போல் சாப்பிடுவதும், சென்சிலுவை சங்கத்தினால் தரப்படும் உடுப்புக்காக வரிசையில் நின்று வாங்குவதும், காசு கிடைத்ததும் ஊரில் உள்ள உறவுகளுடன் தொலைபேசியில் கதைப்பதுமான வாழ்க்கை

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.