தாயின் கள்ளக் காதலனால் தாய்க்கும் மகளுக்கும் கத்தி வெட்டு

0
703

களுத்துறை – கெலிடோ கடற் கரையில்  இன்று காலை முறை  கேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ள தாய் ஒருவரும் அவரது மகளும் வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.

ஹொரனை பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய  தாயும் அவரது 18 வயதுடைய மகளுமே வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த தாயும் மகளும் முன்னர் புலத்சிங்கள – மஹகம பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் தாயின் கள்ளக் காதலன் சிறையில் இருந்துள்ள போது குறித்த இருவரும்  றய்கம பிரதேசத்திற்கு சென்று  தகாத கள்ளத் தொடர்புகளை பல ஆண்களுடன் ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

இந் நிலையில் சிறையில் இருந்து கள்ளக் காதலன் விடுதலையாகி கள்ளக் காதலியை  நலம் விசாரிப்பதற்கு றய்கம பிரதேசத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

இன்று  அதிகாலை  களுத்துறை கடற் கரையில்   இருந்து நேரத்தை கழித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இருவரையும் குறித்தத நபர் மீன் வெட்டும் கத்தியால் வெட்டியுள்ளார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் மகள் கெலிடொ கடற்கரை பகுதியின் அருகாமையில் உள்ள வீடு ஒன்றுக்கு வெட்டு காயங்களுடன் சென்று ” தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு,  தனது தாயின் கள்ளக் காதலன் முயற்சித்ததாகவும் மற்றும் தனது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்ததற்கு இவ்வாறு வெட்டி காயப்படுத்தியதாகவும்” தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த வீட்டில் உள்ளவர்கள் களுத்துறை பொலிஸாருக்கு  தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் நாகொடை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சந்தேக நபர் புலத்சிங்கள பகுதியில் மீன் விற்பனை செய்பவர் எனவும் மீன் வெட்டும் கத்தியை கொண்டே இருவரையும் வெட்டியுள்ளதாகவும் பொலிஸார் தமது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றனர்.

தப்பிச் சென்ற சந்தேக நபரை மடக்கிப் பிடிக்கும் பணியில் பொலிஸார் தீவிரமாக உள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.