ஆன்மாவைச் சுத்தம் செய்ய தீயில் வெந்த மெஜிக் கலைஞர்! (காணொளி)

0
820

கறுப்பு நாய்’ என்று அன்போடு(!) அழைக்கப்படுபவர் ‘லிம் பா’ (68) என்ற மாய வித்தைக்காரர். இவர் தனது உடலையும் ஆன்மாவையும் சுத்தப்படுத்தப் போவதாகக் கூறி, ஒரு பெரிய அண்டாவின் மீது அமர்ந்தார்.

அவரது உதவியாளர்கள் பெரியதொரு மூடியால் அவரை மூடியபின், அண்டாவின் கீழே நெருப்பைப் பற்ற வைத்தனர்.

சுமார் முப்பது நிமிடங்களில், லிம் பா மூடியை பலமாகத் தட்டுவதையும், ஈனஸ்வரத்தில் கத்துவதையும் கேட்டு கலவரமான உதவியாளர்கள் மூடியைத் திறந்து பார்த்தனர்.

அப்போது கடும் சூட்டுக் காயங்களுடன் லிம் பா நினைவிழந்திருந்தார்.

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோதும் லிம்மைக் காப்பாற்ற முடியவில்லை. இரண்டாம் நிலை எரிகாயங்களுக்கு அவர் உட்பட்டிருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட மாரடைப்பாலுமே அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.