பிறந்த குழந்தையை கழிவறையில் போட்டுவிட்டு தப்பிய இளம் தாயார்- ( அதிர்ச்சி தரும் சி.சி.டிவி காட்சிகள்)

0
808

மருத்துவமனை ஒன்றில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தையை அதன் தாயார் கழிவறையில் விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டில் பரபரப்பான மருத்துவமனை ஒன்றில் பிறந்த குழந்தையை அதன் தாயார் கழிவறை குப்பைத் தொட்டியில் விட்டுவிட்டு தப்பியுள்ளார்.

அந்த இளம் தாயாருக்கு இரண்டு பெண்கள் கூடவே சென்று உதவுவதும் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

குறித்த இளம்பெண் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பின்னர் கழிவறையை பயன்படுத்திய ஒருவர், குழந்தை ஒன்று கண்டெடுத்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட மருத்துவர்களால் குழந்தையை காப்பாற்ற் முடிந்தது என கூறுகின்றனர்.

பெருவில் அமைந்துள்ள Solidaridad Salud மருத்துவமனையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் குறித்த இளம்பெண்ணின் உதவிக்கு கூடவே செல்லும் பெண் ஒருவர் அவருக்கு மஞ்சள் நிற தூண்டு ஒன்றை அளிக்கின்றார். அவர் அதை தனது இடையில் கட்டிக் கொள்கிறார்.

குறித்த இளம்பெண்ணின் உடலில் பிரசவத்தின்போது ஏற்பட்ட ரத்தம் படிந்திருக்கலாம், அதனால் அவர் வேறொரு துண்டால் அதை மறைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

அந்த பச்சிளம் குழந்தையை தனியாக தவிக்க விட்டு தப்பிச் சென்ற அந்த இளம் தாயாரும், அவருக்கு உதவிய பெண்கள் இருவர் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.

குழந்தை குறித்த மருத்துவமனையில் மருத்துவர்களின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.