“ஜாக்கின் சானின் மகள் ஒருபால் உறவு விருப்பம் கொண்டவரா?”

0
220

உலகப் புகழ்பெற்ற ஆக்‌ஷன் ஹீரோ ஜாக்கி சானின் மகள் எட்டா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படமும் செய்தியும் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தனது பெண் தோழியான ஆன்டி ஆட்டமுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். புகைப்படச் செய்தியாக, ‘நாங்கள் இருவரும் லெஸ்பியனாக வாழ்கிறோம்’ என்றும் பதிவிட்டிருந்தார்.

இது பற்றி எட்டா கூறியதாவது, ‘என் மீது அன்பும் அளவற்ற ஆதரவவும் தருபவராக ஆன்டி ஆட்டம் (Andi Autumn) உள்ளார்.

எங்கள் உறவு பற்றி ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை. பலர் பாசிடிவாக இதைக் கொள்கிறார்கள் ஆனால் சிலர் கேலியாகவும் எதிர்வினையாற்றுகிறார்கள்.

4532413700000578-4966728-Jackie_Chan_s_daughter_has_come_out_as_a_lesbian_and_posted_mess-m-13_1507647098218நான் எதிர்மறை சூழலில் வளர்ந்தவள். நான் லெஸ்பியன் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன்’ என்று கூறினார்.

எட்டாவின் மனம் கவர்ந்த ஆன்டி ஆட்டமின் வயது 30. கனடாவைப் பூர்விகமாக கொண்ட இவர் தற்போது ஹாங்காங்கில் வாழ்ந்து வருகிறார்.

ஆடை வடிவமைப்பாளரான ஆன்டி தானே டிசைன் செய்த உடைகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். பார்ப்பி டால் போன்று உடையலங்காரம் செய்து புகழ்ப்பெற்றவர் இவர்.

இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு தனது தந்தை ஜாக்கி சான் பற்றி ஒரு பேட்டியில் எட்டா கூறியது, ‘அவர் எனக்குத் தந்தையே இல்லை.

நான் பிறப்பதற்கு காரணமாக இருந்தவர் அவ்வளவுதான். எனக்கு அவர் மீது எவ்வித பாச உணர்வும் ஒரு போதும் ஏற்பட்டது இல்லை. இனியும் ஏற்படாது’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.