காணாமல் போன மூன்று பெண்களும் சரண்

0
864

கடந்த 14 ஆம் திகதி கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயதுடைய குழந்தையின் தாயான, 19 வயதுதான மலிதி வத்சலா, 15 வயது அவரது கணவரின் சகோதரி யசந்தி மதுஷானி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதான சிறுமி சரித்ரா சந்திரசேகரம் ஆகிய மூவரும் காணாமல் போயிருந்தனர்.

குறித்த மூவரும் கடந்த சனிக்கிழமை (14) மலிதியின் தந்தையின் வீட்டுக்குச் செல்வதாக ஒருகொடவத்தைக்கு சென்றுள்ளதோடு, அங்கிருந்து துணி கொள்வனவு செய்யவுள்ளதாக கூறி சென்றுள்ள நிலையில் மீண்டும் திரும்பி வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (18) காலை 19 வயதுதான வத்சலா பெரேரா அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி ஆகியோர் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அதனையடுத்து, இன்று பகல் சரித்ரா ஸ்வேதா எனும் 14 வயது சிறுமியும் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த 19 வயது திருமணமான பெண்ணும் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.