பேஸ்புக் காதலிக்கு தலைக் கவசத்தால் தர்ம அடி காரணம் என்ன ?

0
867

பேஸ்புக்கில் காதலித்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என அறிந்த காதலன் குறித்த பெண்ணைத் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் பண்டாரகம பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

குறித்த இருவரும் பொலிஸாரின் கடும் எச்சரிக்கையின்பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெரியவருவதாவது,

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் குறித்த பெண் கணவனை விட்டுப் பிரிந்து தனது இரு பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்துவருகிறார்.

பேஸ்புக் காதலிக்கு தலைக் கவசத்தால் தர்ம அடி; வினோதமான காரணம்!

பேஸ்புக் மூலம் அறிமுகமான, திருமணம் செய்து, விவாகரத்துப் பெற்ற 22 வயது இளைஞனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

காதலித்த காலத்தில் குறித்த இளைஞர் குறித்த பெண்ணை தனது உந்துருளியில் ஏற்றி ஊரெல்லாம் சுற்றி ஒய்யாரமாக காலத்தைக் களித்துவந்ததோடு, கையிலிருந்த பணைத்தையும் கண்டபடி செலவாக்கியுள்ளார்.

இவ்வாறிருக்கையில் குறித்த பெண் தனது பேஸ்புக் காதலனை பிலியந்தலையில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு வருமாறு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத போது உல்லாசமாக இருந்துள்ளார்.

இதன்பின்னர் பிறிதொரு நாள் குறித்த பெண்ணை அழைத்த போது அன்றைய தினம் தனக்கு லீவு இல்லையென்றும் ஆதலால் பிலியந்தலைக்கு வர முடியாது என்றும் குறித்த பெண் கூறியுள்ளார். ஆனாலும் குறித்த இளைஞன் பிலியந்தலையில் உள்ள பெண்ணின் அத்தை வீடு எனச் சொல்லப்பட்ட வீட்டுக்குச் சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து அயல்வீட்டாரிடம் வினவியபோது, அது குறித்த பெண்ணின் வீடுதான் என்பது தெரியவந்தது. மேலும் கணவனை விட்டுப் பிரிந்திருப்பதும் அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதனால் கடும் கோபத்திற்குள்ளான காதலன் உடனடியாக குறித்த பெண்ணுக்கு அழைப்பெடுத்து ஏன் வரவில்லை என்று கேட்டபோது அந்த நேரத்தில் அங்கே வரமுடியாதென்றும் விரும்பினால் ஆடைத்தொழிற்சாலைக்கு வருமாறும் குறித்த பெண் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆடைத் தொழிற்சாலை சென்ற இளைஞன் குறித்த பெண்ணிடம் நீ என்னை ஏமாற்றிவிட்டாய் என்று கூறியவாறே தனது கையிலிருந்த தலைக் கவசத்தால் தர்ம அடி கொடுத்தார்.

இதனைப் பார்த்த பொலிஸார் அவ்விடத்திற்கு ஓடிவந்து இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். பின்னர் கடும் எச்சரிக்கையின்பின் இருவரையும் விடுவித்தனர். இந்தச் சம்பவத்தால் குறித்த இடத்தில் சிறிது பரபரப்பு நிலை காணப்பட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.