யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.! (படங்கள், வீடியோ)

0
662

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக முன்றலில் இன்று காலை 10 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

DMUMp64VoAAnyxnதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்கனவே கவனயீர்ப்பு போராட்டம், பூரண ஹர்த்தால் என முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது என்ற நிலைப்பாடே சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியில் இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் தாம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

DMUPJheWsAAp-qGஇது தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக இருந்த போதிலும் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால் தாம் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் உடல்நிலை விரைவாக கவனிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி சிறந்த தீர்வை வழங்க வேண்டும் என்பதற்காக நாளைய தீபாவளியை கறுப்பு தீபாவளியாக கொண்டாடுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகலும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

DMUMp64VoAAnyxnDMUPJhWX0AAxD8s

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.