மானிப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழுவினர் நடத்திய அட்டகாச காட்சிகள் வெளியீடு !! ( காணொளி)

0
1591

கடந்த வெள்ளிக்கிழமை (13.10.17) மானிப்பாய் லோட்டன் வீதிப்பகுதியில் புகைப்பட கலைஞரான பத்மராசா என்பவரது வீட்டினுள் புகுந்து வாள்வெட்டு குழுவினர் நடாத்திய காடைத்தனம் தொடர்பான கண்காணிப்பு கமராவின் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நடைபெற்று 04 நாட்கள் கழிந்துள்ள நிலையிலும் எவரும் மானிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை குடாநாட்டில் அர்ப்பணிப்புடன் ஏராளமான பொலிசார் பணியாற்றி வருகின்றனர். ஆனால் ஒரு சில பொலிசார் சட்டவிரோத கும்பல்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு சார்ப்பாக செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.