சர்வதேச தரத்தில் இலங்கையில் புதிய சிறைச்சாலை திறந்து வைப்பு- (வீடியோ)

0
601

சர்வதேச தரத்தில் இலங்கையில் புதிய சிறைச்சாலை திறந்து வைப்பு

சர்வதேச தர நிர்ணயங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள அங்குணகொலபெலஸ்ஸ புதிய சிறைச்சாலை இன்று திறந்து வைக்கப்பட்டது.

சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சிறைச்சாலை வைத்தியசாலை, பயிற்சி நிலையம், கைத்தொழில் கட்டிடம் மற்றும் அதிகாரிகளுக்கான விடுதி என்பன இந்த புதிய சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 1,300 கைதிகளைத் தடுத்து வைக்க முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

இதற்காக 3500 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

45 ஏக்கர் பரப்பளவு கொண்ட அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் நிர்மாணப்பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரையும், இரண்டு மாதங்களுக்குள் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

அதன் பின்னர் தங்காலை சிறைச்சாலை புனரமைப்புப் பணிகளுக்காக அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

Angunukolapelessa-prison-2Angunukolapelessa-prison-3Angunukolapelessa-prison-4

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.