பிரபல தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு – அதிருகிறது ஹொலிவூட் திரையுலகம்

0
411
Mandatory Credit: Photo by Paul Smith/featureflash/silverhub/REX/Shutterstock (8556126ho) Cannes France 19th May 2016: Harvey Weinstein and His Wife Georgina Chapman Attends the Amfar Gala During the 69th Cannes Film Festival in Cannes France On the 19th May 2016 Cannes Ff 2016: Amfar Gala - 19 May 2016

பிரபல தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுஅதிருகிறது ஹொலிவூட் திரையுலகம்

ஹொலிவூட்டின் புகழ்­பெற்ற தயா­ரிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான ஹார்வீ வைன்ஸ்டீன், தமக்குப் பாலியல் தொல்­லைகள் கொடுத்தார் என பிர­பல நடி­கைகள் பலர் சுமத்­திய குற்­றச்­சாட்­டு­க­ளினால் ஹொலிவூட் திரை­யு­லகில் பெரும் அதிர்­வ­லைகள் ஏற்­பட்­டுள்­ளன.

62 வய­தான ஹார்வீ வைன்ஸ்டீன், மிராமெக்ஸ் எனும் திரைப்­பட நிறு­வ­னத்தின் இணை ஸ்தாபர்­களில் ஒருவர்.

2005 ஆம் ஆண்டு தனது இளைய சகோ­தரர் பொப் வைன்ஸ்­டீ­னுடன் இணைந்து த வைன்ஸ்டீன் கம்­பனி எனும் திரைப்­பட நிறு­வ­னத்தை ஹார்வீ வைன்ஸ்டீன் ஆரம்­பித்தார்.

Angelina-Jolie‘பல்ப் பிக் ஷன், கிளார்க்ஸ், தி ஆர்ட்டிஸ்ட்’, ‘தி இமி­ட்டேஷன் கேம்’, ‘ஜாங்கோ அன்­செயிண்ட்’ உள்­ளிட்ட பல படங்­களின் தயா­ரிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ராக ஹார்வீ வைன்ஸ்டீன் விளங்­கினார்.

1998 ஆம் ஆண்டு வெளி­யான ஷேக்ஸ்­பியர் இன் லவ் திரைப்­ப­டத்தை தயா­ரித்­த­மைக்­காக, சிறந்த திரைப் படத்­துக்­கான ஒஸ்கார் விரு­தையும் தயா­ரிப்­பாளர் என்ற வகையில் ஹார்வீ வைன்ஸ்டீன் வென்றார்.

அவரால் தயா­ரிக்­கப்­பட்ட திரைப்­ப­டங்கள் மொத்­த­மாக 81 ஒஸ்கார் விரு­து­களை வென்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், கடந்த பல தசாப்­தங்­க­ளாக அவர் நடி­கை­க­ளுக்கு பாலியல் துன்­பு­றுத்தல் கொடுத்து வந்­தமை தொடர்­பான தக­வல்கள் அண்­மையில் வெளி­யா­கின.

பிர­ப­ல நடி­கைகள், ஏஞ்­ச­லினா ஜோலி, ரோஸ் மெக்­கவுன், க்வெனித் பெல்ட்ரோ, அஷ்லி ஜூட் உள்­ளிட்ட நடி­கைகள் ஹார்­வீயால் பல வரு­டங்­க­ளுக்கு முன்பே பாலியல் துன்­பு­றுத்­த­ல்களுக்கு ஆளா­ன­தாக தற்­போது வெளிப்­ப­டை­யாகப் பேசி வரு­கின்­றனர்.

இது குறித்து அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபாமா, மிஷெல் ஒபாமா, அமெ­ரிக்­காவின் முன்னாள் இரா­ஜாங்க செய­லாளர் ஹிலாரி கிளிண்டன் உள்­ளிட்ட பல அர­சியல் தலை­வர்­களும் தங்கள் கண்­ட­னங்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் வைன்ஸ்டீன் நிறு­வ­னத்தின் இணைத் தலைவர் பத­வி­யி­லி­ருந்து ஹார்வீ வைன்ஸ்டீன் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நி­று­வ­னத்தின் பணிப்­பாளர் சபை அறி­வித்­துள்­ளது.

Ashley-Juddசில நாட்­க­ளுக்கு முன்பு வைன்ஸ்டீன் நிறு­வ­னத்தில் படங்கள் நடித்தும், இயக்­கியும் வரும் சில ஆண் நட்­சத்­தி­ரங்­க­ளிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்க முற்­பட்­ட­போது யாரும் பதில் சொல்­ல­வில்லை என்ற குற்றச்­சாட்டு எழுந்­தது.

தற்­போது லியார்­னடோ டிகெப்­ரியோ, ஜோர்ஜ் க்ளூனி, பென் அப்லெக், ஜெனிபர்லோரன்ஸ், மெரில் ஸ்ட்ரீப், உள்­ளிட்ட பல நடி­கர் நடி­கைகள் ஹார்வீ வைன்ஸ்டீன் சர்ச்சை குறித்து தங்கள் கண்­ட­னங்­களைப் பதிவு செய்து வரு­கின்­றனர்.

நடிகர் லிய­னார்டோ டிகெப்­ரியோ, கருத்துத் தெரி­விக்­கையில் ‘பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு எந்த மன்­னிப்பும் கிடை­யாது.

நீங்கள் யார், எந்த வேலையில் இருக்­கி­றீர்கள் என்று எதையும் பார்க்க முடி­யாது. தைரியத்­துடன் முன்­வந்து குரல் எழுப்­பிய பெண்­களின் மன வலி­மையை நான் பாராட்டு­கிறேன்’ என்று ட்விட்­டரில் குறிப்­பிட்­டுள்ளார்.

இக் குற்­ற­சாட்­டு­களால் வைன்ஸ்­டீனின் மனைவி ஜோர்­ஜினா சாப்மேன்  (Georgina Chapman) தன் கண­வரை விட்டு விலக முடி­வெ­டுத்­துள்­ள­தாக அறி­வித்­துள்ளார்.

Gwyneth-Paltrow-2-2தனது கண­வரின் மன்­னிக்க முடி­யாத செயல்­களால் பாதிக்­கப்­பட்ட அனைத்து பெண்­களை நினைத்தும் தான் மன­மு­டைந்­துள்­ள­தா­கவும், தனது குழந்­தை­களின் நலன் காக்க இந்த முடிவை எடுத்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

2004 ஆம் ஆண்டு முதல் நடை­பெற்­ற­தாக கூறப்­படும் சில சம்­ப­வங்கள் தொடர்பில் ஹார்வீ வைன்ஸ்டீன் மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டுகள் குறித்து தாம் ஒரு­வ­ருடன் பேசி­வ­ருவ­தாக நியூயோர்க் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

பவ்டா எனும் பிரித்­தா­னிய திரைப்­பட மற்றும் தொலைக்­காட்சி அக்­க­டமி தனது அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து ஹார்வீ வைன்ஸ்டீனை நீக்குவதாக அறிவித்துள்ளது.

இதே­வேளை, ஒஸ்கார் விரு­து­களை வழங்கும் அக்­க­டமி ஒவ் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ் அமைப்­பா­னது, ஹார்­வீயின் எதிர்­கால பாத்திரம் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக அவ­சர கூட்­ட­மொன்றை நடத்­த­வுள்­ள­தாக தெரிவித்துள்ளது.
TELEMMGLPICT000143256654_trans_NvBQzQNjv4BqPuL-8ex6Wxr3HGFUi6PIc5PJSXUFsYSH3C2romDdHfIHarvey Weinstein (3rd left) celebrating the Oscars awarded to Shakespeare in Love with Gwyneth Paltrow (3rd right) at the 1999 Academy Awards Credit: Mirek Towski/LIFE Picture Collection

TELEMMGLPICT000143409295_trans_NvBQzQNjv4BqqBYMlWmNSsYKmyFVDYjgrXTmqhJKAznjTj8BNvOsbjwSome of the actresses who have accused Harvey Weinstein of sexual harassment: (top L-R) French actress Lea Seydoux, French actress Emma de Caunes, US actress Gwyneth Paltrow, Itailan actress Asia Argento, US actress Ashley Judd (bottom L-R) British model Cara Delevingne, US actress Rosanna Arquette, French actress Judith Godreche and US actress Angelina Jolie, US actress Rose McGowan

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.