ஐஸ்வர்யாராயை அடைய விரும்பிய ஹாலிவுட் தயாரிப்பாளர்

0
2213

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராயை ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் அடைய விரும்பிய தகவல் ஐஸ்வர்யா ராயின் மானேஜர் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் வெயின் ஸ்டீபன். இவர் பலநடிகைகளுடன் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.

ஐஸ்வர்யா ராயையும் இவர் அடைய விரும்பிய சம்பவம் இப்போது வெளியாகி இருக்கிறது.

201710141458263197_1_Ishwarya-Rai2._L_styvpfஐஸ்வர்யா ராயின் டேலண்ட் மானேஜராக இருந்த சீமோன் ஷெப்பீல்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அது பற்றி கூறிய அவர்…

“நான் ஐஸ்வர்யாராயின் மானேஜராக இருந்தேன். அப்போது வெயின் ஸ்டீன், ஐஸ்வர்யாராயை தனியாக சந்திக்க துடித்தார். அதை என்னிடம் அவர் தெரிவித்தார்.

தன்னுடன் ஐஸ்வர்யாராயை தனியாக அனுப்பி வைக்கும்படி பலமுறை என்னிடம் கூறினார். அவருடைய நோக்கம் எனக்கு தெரிந்ததால் பலமுறை அவர் சொல்லியும் நான் அதை ஏற்கவில்லை.

நானும் ஐஸ்வர்யாராயும் பெயின்ஸ் டீன் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்ற போது, அவர் என்னிடம் வந்து, “நான் ஐஸ்வர்யாவை தனியாக சந்திக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “அது நடக்காது” என்று நான் கூறினேன்.

ஐஸ்வர்யாவும், நானும் ஓட்டலுக்கு திரும்பிய பிறகு ஒரு பொம்மையை வாங்கி அதில், டயட் கோக்கை நிரப்பி பெயின்ஸ் டீனுக்கு பரிசாக அனுப்பி வைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.