வவுனியாவில் சிறுமியை கடத்திச்செல்ல முயற்சி! தந்தை சுதாரித்ததன் காரணமாக கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

0
324

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் கிராமத்தில் பத்துவயது சிறுமியை நேற்று முன்தினம் (12) கடத்தி செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது

ஒலுமடு வித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் பத்து வயது சிறுமியை நேற்று முன்தினம் நடுநிசியில் வீட்டுக்குள் நுழைந்து மர்மநபரொருவர் கடத்திச் செல்ல முயற்சித்தவேளை வீட்டுக்கு வெளியே படுத்திருந்த தந்தையார் மர்மநபரை விரட்டிச்சென்ற நிலையில் குறித்த நபர் சிறுமியை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து நெடுங்கேணி பொலிசாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்ற பொலிசார் தேடுதல் மேற்கொண்டதுடன் சந்தேகநபரினது என சந்தேகப்படும் ஒரு செருப்பை கைப்பற்றியுள்ளதுடன். விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட சிறுமி கடந்த ஒருவருடத்திற்கு முன் 60 வயதுடைய சுப்பிரமணியம் என்பவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு நீதிமன்றம் பிணைவழங்க மறுத்துவருவதுடன் தொடர்ந்து சந்தேக நபர் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதானது பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.