தமிழ் மக்களை தமிழ்க் கட்சி விற்கின்றதா? – ஜே.எஸ். திசைநாயகம் (சிறப்பு கட்டுரை)

0
571

2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்று தொடர்பாக இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்தது.

2017 செப்டெம்பர் 21 இல் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழு புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வதற்கான யோசனையைக் கொண்டதாக அந்த அறிக்கை அமைந்திருக்கின்றது.

இந்த யோசனை பற்றி தமிழர்கள் கேட்டிருப்பதிலும் பார்க்க அதிகளவுக்கு குறைவானதாகும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கி அடி எடுத்து வைப்பதாக யோசனைகள் அமைந்திருக்கின்றதா அல்லது 30 வருட கால உள்நாட்டு யுத்தத்திற்கு நாட்டைக் கொண்டு சென்ற துன்பங்களை திரும்ப ஏற்படுத்துவதற்கொன்றாக இது அமையுமா என்பது இங்குள்ள கேள்வியாகும்.

2015 இல் தேர்தலின் போது பாராளுமன்றத்தில் இன்றுள்ள மூன்று பெரிய கட்சிகளான ஐ.தே.க. ஐ.ம.சு.மு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை புதிய அரசியலமைப்பு தொடர்பான உறுதிமொழியை அளித்திருந்தன.

ஆனால் அந்த அரசியலமைப்புக்கான தொலைநோக்கு ஒருமித்ததாக அமைந்திருக்கவில்லை. ஐ.தே.க. மற்றும் ஐ.ம.சு.மு. விஞ்ஞாபனங்கள் சமஷ்டி அரசியலமைப்பை ஒட்டுமொத்தமாக நிராகரித்திருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபுறத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு ஒன்றுக்கான தனது கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு தனது வாக்காளர்களை கேட்டிருந்தது.

“அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் சமஷ்டிக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டதாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த அலகாக முன்னர் இருந்தது போன்று ஸ்தாபிக்கப்படுவதை தொடர்வது அவசியம்’ என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாகும்.

இந்த அதிகாரப் பகிர்வு ஏற்பாடானது கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட மத்திய அரசாங்கம் ஒன்று பற்றிக் குறிப்பிடுகின்றது.

பாரம்பரியமாக கொழும்பிலுள்ள மத்திய அரசாங்கம் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரைக் கொண்டதாகும். அடுத்ததாக தெரிவு செய்யப்பட்ட ஒன்பது மாகாண சபைகளுடன் அதிகாரங்களைப் பகிர்வதாகும்.

ஒன்பது மாகாணங்களில் வடக்கு மட்டும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாகும்.

அதேவேளை தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கவனத்தில் கொண்டதாக அமைந்தது.

2017 வழிகாட்டல் குழுவின் அறிக்கையானது சமஷ்டி அரசொன்றுக்கான யோசனையை முன்வைக்கவில்லை.

இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. 2017 வழிகாட்டல் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, இந்தக் கேள்விகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதியளித்திருக்கின்றார்.

“சமஷ்டி போன்ற வார்த்தைகளில் நாங்கள் தொங்கிக் கொண்டிருப்பது அவசியமல்ல. உலகின் பல நாடுகளில் எந்தவொரு பெயரும் (ஏற்பாடு பற்றி தெரிவிக்காமல்) இல்லாமல் அதிகாரம் பகிரப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த விவகாரமானது வெறுமனே முறைப்படுத்தப்பட்ட வழக்குச் சொல் என்பதற்கு அப்பால் அதிகளவு தூரம் செல்லும் விடயமாக அமைந்திருக்கிறது.

அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்த தமிழர்கள் சமஷ்டியை வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், மாகாண ஆளுநரின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மத்திய அரசாங்கம் சென்றடைவதை சில வழிகளில் யோசனைகள் கட்டுப்படுத்துவதாக அமைந்திருக்கின்ற போதிலும் தொடர்ந்து பாரியளவு அதிகாரத்தை மத்திய அரசு வைத்திருக்கும் தன்மையே யோசனைகள் கொண்டிருக்கின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உள்விவகாரங்களில் கூட தமிழர்களும் முஸ்லிம்களும் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதிலிருந்தும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்திலான அதிகளவு அதிகாரத்தை தொடர்ந்தும் மத்திய அரசாங்கமே கொண்டிருக்கும்.

கொள்கை, வகுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு காண்பது போன்ற மூன்று விவகாரங்களை சுருக்கமாக பார்த்தால் மத்திய அரசாங்கம் அதிகாரத்தை எவ்வாறு தக்க வைத்திருக்கும் என்பதை அது வெளிப்படுத்தும்.

தற்போதைய அரசியலமைப்பின் கீழ் “சகல விடயங்களும் செயற்பாடுகளும் தொடர்பான கொள்கை’ தேசிய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும்.

இந்த விடயம் மாகாண கொள்கை வகுப்பாளர்களை குறிப்பாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்தோரை விசனமூட்டுவதாக அமைந்திருக்கின்றது.

இந்த ஏற்பாடு மாகாணங்களின் உள்விவகாரங்களில் மத்திய அரசாங்கம் தலையீட்டை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென அவர்கள் நோக்குகின்றனர்.

உத்தேச அரசியலமைப்பில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் தேசியக் கொள்கையை தயாரிப்பதற்கு வழிகாட்டல் குழு பரிந்துரைக்கின்றது.

அதேவேளை, அரசு தொடர்பான விடயங்களுக்கு யோசனைகள் செல்லும் போது தேசிய கொள்கையை மாகாணங்களினால் உருவாக்கப்படும் சட்டமூலங்கள் மேவிச் செல்ல மாட்டாதெனவும் அதாவது அது பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்பாக மாகாணங்கள் இயற்றிய சட்டமூலங்கள் தேசிய கொள்கையை மேவிச் செல்லாது என்றும் அதேவேளை மாகாணங்களுக்கு ஏற்கனவே பகிரப்பட்ட அதிகாரங்களை திரும்ப எடுத்துக் கொள்ளக் கூடாதென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் தேசிய சட்டமூலத்தின் அங்கமாக சட்டமாக்க இயற்றப்பட்டால் மாகாணக் கொள்கையை தேசியக் கொள்கை மேவிச் செல்ல முடியும்.

இந்த அரசியலமைப்பு ஏற்பாடுகள் எவை என்பது பற்றி யோசனைகளில் விசேடப்படுத்தியிருக்கவில்லை.

எவ்வாறாயினும் யோசனைகளிலிருந்து பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென விடயங்கள் தென்படுகின்றன.

அத்துடன் மேல் சபை ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு குறித்தும் பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.

மேல் சபை ஒன்றை ஏற்படுத்துவது குறித்து வழிகாட்டல் குழு யோசனை முன்வைத்திருக்கிறது.

ஆனால் அதன் அதிகாரங்கள் அல்லது உள்ளடக்கம் தொடர்பாக அங்கு எதுவும் இல்லை. மாகாணங்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டமூலத்தை இதனால் தடுக்க முடியும் என்ற உத்தரவாதம் அங்கு இருப்பதாக தோன்றுகிறது.

ஆதலால் வழிகாட்டல் குழுவின் யோசனைகள் தற்போதைய அரசியலமைப்பு போன்று அதே முடிவை வென்றெடுப்பதற்கான பாதைக்கு பயன்படுத்தப்படுகின்றது.

மத்திய அரசாங்கத்தின் பெரும்பான்மையை பயன்படுத்தி மாகாணங்களுடன் ஆகக் குறைந்தளவு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதைக் கூட கடினமாக்குவதாக இது அமைந்திருக்கின்றது.

மாகாணக் காணி தொடர்பான வழிகாட்டல் குழுவின் யோசனைகள் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாக தென்படுகின்றது.

அதேவேளை மாகாணங்கள் மீது மத்தியின் பிடியை தளர்த்துவதில் சிறியளவிலான விடயமே காணப்படுகிறது.

இப்போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தனியார் காணிகளை உரிமையாளருக்கு திரும்ப ஒப்படைக்குமாறு வடக்கு, கிழக்கில் வலியுறுத்தல் விடுத்து போராட்டங்கள் இடம்பெறுகின்றன. அதனடிப்படையில் இந்த யோசனையை பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அரசாங்கத்தின் அனுசரணையுடனான சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக பரந்தளவில் கருத்து பேதம் காணப்படுகிறது. நடைமுறையிலுள்ள குடிப்பரம்பலை மாற்றிப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மாற்றும் தன்மையென விசனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

காணிப் பிணக்கு தீர்வுத் திட்டங்களில் மாகாணத்தில் காணியில்லாதோரை குடியேற்றுவதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கான யோசனைகளும் வழிகாட்டல் குழுவின் யோசனைகளில் உள்ளடங்கியிருக்கின்றன. அது சிறந்ததாகும்.

ஆனால், புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் சட்டரீதியாக உரிமையைப் பெற்றிருத்தல் அல்லது நிலைகொண்டிருப்பவர்கள் உடனடியாகவே புதிய அரசியலமைப்பு வருவதற்கு முன்பாக தமது காணியை தொடர்ந்து வைத்திருப்பதற்கு பாதிப்பானதாக அமையும்.

யாவற்றிலும் மேலானதாக காணி ஒதுக்கீடானது மாகாணக் காணி அபிவிருத்தித் திட்டங்களில் பூர்த்தியடைந்திருக்கவில்லை.

புதிய அரசியலமைப்பானது அரசாங்கத்தின் குடிப் பரம்பல் முறையில் மாற்றத்தை மேற்கொள்ளும் முயற்சியை நிறுத்துவதாக அமைந்திருக்கவில்லை. அதற்கு ஏற்புடையதாக புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்துபவையாக இந்த ஏற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

அதேவேளை மத்திய அரசினால் நியாயபூர்வமான வகையில் தேவைப்படும் காணியை சுவீகரிப்பதற்கு வழிகாட்டல் குழுவின் யோசனைகள் இடமளிக்கின்றன. அதேபோன்று தேசிய பாதுகாப்புக்கு தேவைப்படும் காணியை மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்ள முடியும். நட்டஈடு தொடர்பாக அங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மூன்றாவது விவகாரமாக காணப்படுவது பொது மக்கள் பாதுகாப்பாகும். “மாகாண நிர்வாகம்’ ஆயுதக் கிளர்ச்சியை மேம்படுத்தினால் அல்லது அரசியலமைப்பை மீறுவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டால் மாகாண ஆளுநர், முதலமைச்சர், அமைச்சரவை ஆகியோரின் அதிகாரத்தை ஜனாதிபதி சுவீகரிக்க முடியுமென வழிகாட்டல் குழு குறிப்பிடுகிறது.

எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தையும் நீதித்துறை மீளாய்வையும் பெற்றுக் கொள்ள வேண்டியவையாக அமைந்திருக்கின்றன.

தெரிவு செய்யப்பட்ட துணை அலகொன்றின் மீதான மத்தியின் கட்டுப்பாட்டு அளவானது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் அதிகாரம் பகிரப்படும் போது அதனை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக பார்க்க முடியும்.

ஆனால் சமஷ்டி அரசியலமைப்பாயின் இந்த அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி குறைந்தது தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சருடனாவது கலந்துரையாட வேண்டியிருக்கும்.

இலங்கை பிளவுபடாததும் பிரிக்க முடியாததுமான நாடாக விளங்கும் என்ற வார்த்தைகள் வழிகாட்டல் குழுவின் உள்ளடக்கத்தில் இடம்பெற்றிருப்பதற்கு குறிப்பிடத்தக்களவு பாராட்டு காணப்படுகிறது.

1990 இல் வட, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏ.வரதராஜப்பெருமாள் சுதந்திரத்திற்கான உலகப் பிரகடனத்தை அறிவித்த பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரத்தில் கையாள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது.

ஆனால், தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் ஒருவருடன் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடுவதற்கோ அல்லது செயற்படுவதற்கோ குறைந்தளவிலான தன்மையே அங்கு காணப்படுகிறது.

wigneswaran2_1654671gவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்பாக தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.

அத்துடன் மாகாணத்தின் சிவில் வாழ்விற்பான தலையீடு தொடர்பாக அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

இத்தகைய விடயங்களில் செயற்படுவதை அரசியலமைப்பு ரீதியாக தடுத்திருக்கின்ற போதிலும் வட, கிழக்கிலுள்ள பொது மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட சமூகமொன்றின் தாக்கத்திற்கு
சிக்கியுள்ளனர். வழிகாட்டல் குழுவின் யோசனைகள் இந்தப் பிரச்சினையை மேலும் அதிகரிப்பதற்கு மட்டுமே இட்டுச் செல்லும்.

மேற்குறிப்பிட்ட மூன்று உதாரணங்களும் 2015 இல் தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்திருந்த உறுதிமொழிகளுக்கும் 2017 இல் வழிகாட்டல் குழு ஏற்றுக் கொண்டிருந்த யோசனைகளுக்குமிடையிலான அவதானிக்கக்கூடிய இடைவெளியாக காணப்படுகின்றது.

அந்த அரசியல் யதார்த்தத்தை மேற்கொள்ளும் போது கட்சியின் நிலைப்பாடு தொடர்பான வாதம் ஒன்று முன்வைக்கப்படுகிறது.

தமிழர்களின் சார்பாக 1972 அரசியலமைப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சமஷ்டிக் கட்சி அரசியலமைப்பு நிர்ணய சபையிலிருந்தும் வாபஸ் பெற்றிருந்தது.

30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பலதரப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாக அச்சமயம் பேசப்பட்டது.

மறுபுறத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான உணர்வானது அனர்த்தங்களைத் தடுப்பதற்கு இயலாததாக இருக்குமானால் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் தற்போது இருப்பது போன்ற தன்மையில் வைத்திருக்குமானால் அத்தகைய ஆவணமொன்றின் பிரயோசனம் தான் என்ன?

சமஷ்டி போன்ற வார்த்தைகளில் தமிழர்கள் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது என்று ஆலோசனை தெரிவித்திருந்த அதே கூட்டத்தில் “நாங்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) தமிழ் மக்களை விற்க மாட்டோம் என்று சம்பந்தன் கூறியிருந்தார்.

எமது மக்களின் உரிமைகளை நாங்கள் அடமானம் வைக்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

தமிழர்களின் நலன்களை விற்காதிருப்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் இருந்தால் ஏனைய கட்சிகளுடன் அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக மீள பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேவைப்பாட்டை கூட்டமைப்பு கொண்டிருக்கின்றது.

இல்லாவிடின் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கான துரோகத் தனமாக இது அமையும்.

ஏசியன் கொரஸ்பொன்டன்ட்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.