டெங்கு காய்ச்சலுக்கு தஞ்சை பெண் வக்கீல் பலி

0
435

தஞ்சையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் வக்கீல் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு தஞ்சை பெண் வக்கீல் பலியாகி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 35). வக்கீலான இவர் தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி துணை செயலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கவிதா கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது டாக்டர்களின் பரிசோதனையில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் கவிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் பலனின்றி இன்று காலை கவிதா பலியானார்.

டெங்கு காய்ச்சலுக்கு பெண் வக்கீல் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு பலியான கவிதா, கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

வக்கீல் கவிதா , அ.தி.மு.க. மகளிரணி பதவியிலும் இருந்ததால் கட்சி நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.