“பெண் சாமியாரின் ஆபாச நடனம்: கொந்தளித்த சமூக வலைத்தளங்கள் (விடியோ)

0
628

மும்பை: சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற மும்பையைச் சேர்ந்த பெண் சாமியாரான ராதே மா தனது ஆதரவாளர் ஒருவருடன் அருவறுக்கத்தக்க வகையில் ஆபாச நடனம் ஆடிய விடியோ சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை  கிளப்பியுள்ளது.

மும்பை போரிவிலி பகுதியைச் சேர்ந்த பெண் சாமியார் ராதே மா. அதிரடியாக ஏதாவது காரியங்களை செய்து, சர்ச்சைகளைஉண்டாக்கி, எப்போதும் பரபரப்பில் இருப்பவர்.

கடந்த வாரம் கூட தில்லி காவல் நிலையம் ஒன்றில் நிலைய காவல் அதிகாரியின் இருக்கையில் இவர் அமர்ந்திருக்க, அதிகாரி கைகட்டி நின்ற சம்பவம் கடும் சர்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக இவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது ஆதரவாளர் ஒருவருடன் ராதே மா அருவறுக்கத்தக்க வகையில் ஆபாச நடனம் ஆடிய விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை  கிளப்பியுள்ளது.

சர்ச்சைக்குரிய அந்த விடியோவில் பெயர் தெரியாத இடம் ஒன்றில் ஏதோ விருந்து நிகழ்ச்சி நடப்பது போல் இருக்கிறது.

அதில் வழக்கத்துக்கு மாறாக நவ நாகரீக உடை அணிந்து இருக்கும் ராதே மா மெதுவாக நடன அசைவுகளை வெளிப்படுத்தியவாறு இருக்கிறார்.

அப்பொழுது அவரது அருகில் இருக்கும் ஆதரவாளர் ஒருவர் ராதே மாவுடன் நடனம் ஆட விரும்ப, அவருடன் சேர்ந்து ஆடுகிறார்.

அவர் ராதே மாவை அப்படியே தூக்கி வைத்துக் கொண்டு நடனமாடுவதுதான் தற்பொழுது சமூக வலைதள பயனாளர்கள் மத்தியில் கடும் கண்டனங்களை சம்பாதித்துள்ளது

இப்படி அவர் நடந்து கொண்டதை பலரும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விடியோ:

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.