மாணவியும் மாணவனும் உரையாடிக் கொண்டிருந்ததாக கிடைத்த தகவலால் முரண்பாடு: 50க்கும் மேற்பட்டவர்களால் வவுனியாவில் வீடு, கடை சேதம்!!

0
410

• கைக்குண்டு வீச்சு பணம், காசோலை அபகரிப்பு; காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

ஒரு மாண­வியும் மாண­வனும் உரை­யாடிக் கொண்­டி­ருந்­த­தாக நபர் ஒருவர் குறித்த மாண­வியின் தந்­தை­யிடம் கூறி­ய­தனால் ஏற்­பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்ததுடன், வீடு, கடை என்­பன சேதப்­ப­டுத்­தப்­பட்ட சம்­பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்­பெற்­றுள்­ளது.

அத்­துடன், வெடிக்­காத நிலையில் கைக்­குண்டு ஒன்­றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் தெரிய வரு­வ­தா­வது, வவு­னியா நொச்சி மோட்டை புதிய சின்­னக்­குளம் பகு­தியில் ஒரு மாண­வியும் மாண­வனும் உரை­யாடிக் கொண்டிருந்ததனை அவ­தா­னித்த ஒருவர் இது தொடர்பில் குறித்த மாண­வியின் வீட்டா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து, குறித்த மாண­வியின் தந்தை தனது மகள் தொடர்பில் தகவல் வழங்­கிய நப­ரிடம் சென்று தனது மகள் இன்­னொரு மாண­வ­னுடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்­த­மைக்­கான ஆதா­ரங்­களைக் காட்­டு­மாறு கேட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து, ஆத்­தி­ர­ம­டைந்த குறித்த நபர் மாண­வியின் தந்­தையை தாக்­கி­யுள்ளார். இத­னை­ய­டுத்து மாண­வியின் தந்தை வவு­னியா மாவட்ட பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

காய­ம­டைந்த நபர் வைத்­தி­ய­சாலை பொலி­ஸா­ரிடம் வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தின் அ­டிப்­ப­டையில் தாக்­குதல் மேற்­கொண்ட நபரின் வீட்­டுக்குச் சென்று குறித்த நபரை ஓமந்தை பொலிஸ் நிலை­யத்­துக்கு வரு­மாறு தெரி­வித்து விட்டு சென்­றுள்­ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90-2-6குறித்த நபர் பொலிஸ் நிலை­யத்­துக்கு செல்­லாத நிலையில், சின்­ன­குளம் கிரா­மத்தை சேர்ந்த 50க்கு மேற்­பட்ட நபர்கள் மாணவி தொடர்பில் தகவல் வழங்­கிய நபரின் வர்த்­தக நிலை­யத்­துக்குள் புகுந்து பொருட்­களை சேத­மாக்­கி­ய­துடன் குறித்த நபரின் வீட்­டினுள் புகுந்தும் அட்­ட­காசம் செய்­துள்­ள­தாக ஓமந்தை பொலிஸார் தெரி­வித்­தனர்.

அத்துடன், அவரின் டிப்பர் வாக­னத்தின் மீதும் கைக்­குண்டை வீசி சென்­றுள்­ள­தாக ஓமந்தை பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச் சம்­ப­வங்­களின் போது வர்த்­தக நிலை­யத்­தி­லி­ருந்த ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் காசோலை என்­பன காணாமல் போயுள்­ள­தா­கவும் வர்த்­தக நிலை­யத்தின் உரி­மை­யாளர் ஓமந்தை பொலிஸ் நிலை­யத்தில் வாக்­கு­முலம் பதிவு செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, வெடிக்­காத நிலையில் காணப்பட்ட கைக் குண் டை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் பொலி ஸாருடன் இணைந்து விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
vavunia-2vavunia

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.