மட்டக்களப்பில் பெண் ஒருவர் மர்மமாக உயிரிழப்பு –கொக்கட்டிச்சோலையில் பதற்றம்

0
500

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய வீதியில் உள்ள விஜயரட்னம் தர்மினி என்னும் ஐந்து வயது பிள்ளையின் 26வயது தாயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கட்டிலில் தூங்கியவாறே உயிரிழந்த நிலையில் தமது சகோதரி காணப்பட்டதாகவும் உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்தார்.

குறித்த பெண் உயிரிழந்த பகுதியில் உள்ள வீட்டு மோட்டு வளையில் கயிறு ஒன்று தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் கொக்;கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சகோதரியின் பாடசாலை நண்பன் ஒருவர் குறித்த வீட்டில் இருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் குறித்த பட்டிப்பளையை இளைஞன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பெண் உயிரிழந்த வீட்டுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு நின்ற இளைஞர்களை தாக்கமுட்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

ஆத்துடன் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் சந்தேகிக்கப்படும் இளைஞரை கைதுசெய்யாமல் அவரை காப்பாற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டதாகவும் பிரதேச மக்கள் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தினை பெருமளவான இளைஞர்கள் சூழ்ந்திருந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டதை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்,சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் தொடர்பில் விசாரணை நடாத்தப்படும் என பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

DSC04998DSC04999DSC05000DSC05001DSC05002DSC05003

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.