மட்டக்களப்பில் 17 வயது இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

0
403

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி, ஐயங்கேணி பிரதேசத்தில் யுவதி ஒருவர் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட யுவதி மாணிக்கப்பிள்ளையார் கோவில் வீதி, பாரதி கிராமம் ஐயங்கேணியைச்சேர்ந்த 17 வயதுடைய கிறிஸ்ரலா என தெரிய வருகிறது.

குறித்த யுவதியின் தாய் மற்றும் தந்தை இருவரும் வேறு திருமணம் செய்துள்ளதாகவும் யுவதி அவரது பாட்டியுடன் வசிப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் தற்கொலைக்கான காரணங்கள் தெரிய வராத நிலையில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோரின் அரவனைப்பில் குறைண்ட 17 வயது யுவதி, அன்பாக நேசித்த நண்பியின் அரவனைப்பும் அற்று போகுதே என மன உளைச்சலுக்குள்ளாகி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக  தெரிய வருகிறது.

uvathias

22279602_166921030554878_313791600163496933_n22366315_166921023888212_6540845612621444413_n

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.