நீண்ட நாக்கைக் கொண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நாய்!- (வீடியோ)

0
445

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த நாய் ஒன்று உலகிலேயே மிக நீண்ட நாக்கைக் கொண்டது என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தெற்கு டகோட்டாவின் Sioux Falls பகுதியில் வளர்ந்து வரும் Mochi ‘Mo’ Rickert என்ற இந்த நாய்க்கு எட்டு வயதாகிறது. இதன் நாக்கு 19 சென்டி மீட்டர் நீளத்தில் உள்ளது.

உலகில் உள்ள அனைத்து நாய்களையும் விட மிக நீளமான நாக்கைப்பெற்றுள்ளதாக கின்னஸ் நிறுவனத்தால் இந்த நாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்லா ரிக்கெட் என்ற பெண் இந்த நாயை வளர்த்துவருகிறார். ஒரு முறை பயணம் மேற்கொண்டிருந்த போது இந்த நாயைக் கண்டெடுத்து வந்து கடந்த ஆறரை ஆண்டுகளாக வளர்த்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கின்னஸ் புத்தகத்தில் இந்த நாய் இடம்பெற்றுள்ளது தொடர்பான சான்றிதழை அவர் பெருமையுடன் அனைவரிடமும் காட்டி வருகிறார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.