யாழ், மல்லாவி பகுதியில் பட்டப்பகலில் துரத்தி துரத்தி வாள்வெட்டு!

0
263

யாழ்ப்பாணம் மல்லாவி பகுதியில் பட்டப்பகலில் வர்த்தகர் ஒரு மீது, துரத்தி துரத்தி வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு, வர்த்தகரை வெட்டியுள்ளது. வர்த்தகர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், குறித்த குழு துரத்தி துரத்தி வெட்டியதால், மக்கள் பீதியில் அல்லோல கல்லோலப்பட்டு ஓடியுள்ளனர்.

எனினும், வாள்வெட்டுக்கு இலக்கானவர் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்ததால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மல்லாவி பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கோரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

படுகாயங்களுடன் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ள மல்லாவி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதும், ஆங்காங்கே இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.