வெள்ளி இறகுகளுடன் வானத்தில் பறக்கும் மனித உருவங்கள்…!!(வீடியோ)

0
899

ஆந்திர மாநிலத்தில் வித்தியாசமான உருவங்களில் ஜோடி ஜோடியாக வானத்தில் வெள்ளி இறகுகளுடன் பறப்பதாக அங்குள்ளவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள்

கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் பறப்பதாக தகவல் பரவியுள்ளது.

இந்த உருவங்களுக்கு கைகளுக்கு பதில் 2 இறக்கைகள் வெள்ளி போல வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. கால்கள் மனிதர்களுக்கு இருப்பது போல நீளமாக உள்ளன.

இந்த உருவங்கள் பூமியை நோக்கி பறந்து வருவதாகவும் பின்னர் வானத்துக்கு சென்று விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சில உருவங்கள் வீட்டு கூரை மீது நின்றபடி கீச்… கீச்… குரலில் பேசிக் கொள்வதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

மனித உருவங்கள் பறப்பதாக தகவல் வந்தவுடன் யாரும் வெளியே படுப்பது இல்லை. இரவு 7 மணிக்கே வீட்டு ஜன்னல், கதவுகளை மூடிக் கொள்கிறார்கள். சிலர் ஜன்னலை மட்டும் திறந்து அந்த உருவங்களை பார்க்கிறார்கள்.

அந்த உருவங்கள் கொக்கு அல்லது நாரையாக இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அது மனித உருவில் இருப்பதால் பேயாக இருக்கலாம் என்றும், தேவதைகளாக இருக்கலாம் என்றும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இது போல் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் கிரேக்க தேவதைகள் போல் இறக்கையுடன் பறந்த மனித உருவங்கள் சிலவற்றை அந்நாட்டை சேர்ந்த போவிஸ்டா என்பவர் வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து உள்ளார்.

ஆந்திராவில் பறந்ததாக கூறப்படும் உருவங்கள் பிரேசிலில் பறந்த உருவங்களை போல் உள்ளது.

ஆனால் அதே படங்களை வாட்சப்பில் பதிவு செய்து இவ்வாறு புரளியை கிளப்புகிறார்களா என்பதும் தெரியவில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.