இந்தியாவுடன் போர் நிறுத்தம்! : பிரபா பிரபாகரன் உறுதியான குரலில் சொன்ன பதில்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -125

0
626

புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் சிலரும் கிட்டுவின் கருத்துப்படி செய்தால் பிரபாகரனையும் பாதுகாக்கலாம். இயக்கத்தையும் காப்பாற்றலாம் என்று நினைத்தனர். பிரபாகரனிடமே நேரடியாகப் பேசிப் பார்த்தனர்.

அவர்களிடம் பிரபாகரன் உறுதியான குரலில் தெரிவித்த கருத்து இது:

“நான்  செத்த பின்னர் வேண்டுமானால் யார் வேண்டுமானாலும் இயக்கத்தை மொத்தமாகவோ சில்லறையாவோ விற்றுக்கொள்ளட்டும். நான் உயிரோடு இருக்கும்வரை அது நடக்காது”.

புலிகளை சரணடைய செய்ய இந்தியா விரும்புகின்றது. படைகளை குவித்துவைத்து மிரட்டி பணிய வைப்பதே இந்தியாவின் எண்ணம் என்துதான்  பிரபாகரனின் உறுதியான கருத்தாக இருந்தது.


தொடர்ந்து…..

உலகத்தமிழர் மாநாடு

இந்தியப் படையினருடன் போர்; நடத்திக்கொண்டே சர்வதேச ரீதியில் பிரச்சாரப் போரையும் நடத்தினார்கள் புலிகள் இயக்கத்தினர்.

1988 மே மாதத்தில் இலண்டனில் “உலகத் தமிழர் மாநாடு” நடைபெற்றது.

வெளிநாடுகளில் “உலகத் தமிழர் இயக்கம்” என்னும் பெயரில் புலிகள் இயக்கத்தினர் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

“உலகத் தமிழர் இயக்கம்” ஒரு பொது அமைப்பு என்ற வெளியே சொல்லப்படுவது உண்டு. இதனால் “கனடா” போன்ற நாடுகளில் பொது அமைப்பு என்ற ரீதியில் அரசாங்கத்தின் நிதி உதவியும் கிடைப்பதுண்டு.

உலகத் தமிழர் இயக்கத்தினர்தான் 1988 மேயில் உலகத் தமிழர் மாநாடு (உலகத் தழிழாராய்ச்சி மாநாடு அல்ல இது) ஒன்றை நடத்தினார்கள்.

இலங்கை- இந்திய உடன்படிக்கை தொடர்பாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் ஆராய்வதே மாநாட்டின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பல பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

நெடுமாறன், உன்னி கிருஷ்னன் எம்.பி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ன அய்யர், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலாளர் வெங்கடேஷ்வரன், உபேந்திரா, வை.கோபால் சாமி உட்பட பல பிரபலங்கள் இந்தியப் பிரதிநிதிகளில் அடங்குவர்.

அமேரிக்காவைச் சேர்ந்த திருமதி கரேன் பார்க்கர், சுவீடனைச் சேர்ந்த திரு. பீட்டர் ஷாக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் எப். ஊட்டன் என்னும் மதகுரு, பிரான்ஸ் நாட்டவரான திரு. பிக்குவா ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.

உலகத் தமிழர் மாநாட்டை குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தவர் நெடுமாறன். மாநாட்டின் நோக்கங்களை விளக்கி உரையாற்றியவர் திரு.நடேசன் சத்தியேந்திரா.

பிரபல சட்டத்தரணியான சந்தியேந்திரா திம்புப் பேச்சுவார்த்தையில் ரெலோவின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர்.

உலகத் தமிழர் மாநாட்டில் உரையாற்றிய சத்தியேந்திரா “தமிழீழப் போராட்டத்தின் உண்மையான வழிகாட்டி பிரபாகரன்தான”; என்று குறிப்பிட்டார.;

poradamasசர்வதேச இராணுவக்குழு

தந்தை செல்வாவின் மருமகனும் கனடாவில் பேராசிரியராக இருப்பவருமான டாக்டர் ஜெயரத்திணம் வில்சன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் நெருங்கிய நண்பர்களாக கருதப்பட்ட இருவரில் ஒருவர் ஜெயரத்தினம் வில்சன். மற்றொருவர் நீலன் திருச்செல்வம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அமேரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ இவர்கள் இருவரையும்; தூண்டிவிடுவதாக அப்போது போராளி இயக்கங்கள் குற்றம் சாட்டின.

உலகத் தமிழர் மாநாட்டில் டாக்டர் ஜெ.வில்சன் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் பற்றிக் குறி;ப்பிட்டார். ஆனால் அமேரிக்காவை மட்டும் குறிப்பிடாமல் தவிர்ந்து விட்டார்.

மாநாட்டில் ஜெ.வில்சன் கூறியதில் முக்கியமான கருத்துக்கள் இவை:

“இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒருபோதும் நீடிக்க போவதில்லை. இந்திய-இலங்கை நட்புறவை வளர்ப்பதற்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஒன்று திரள இந்த ஒப்பந்தம் வழிவகுத்துவிட்டது. சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளின் அச்சு ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக விரைவில் அது வெடிக்கப்பபோகிறது” என்றார் வில்சன்.

“இந்தியா தனது புதிய கண்டுபிடிப்புகளான நாசகார ஆயுதங்களை ஈழத் தமிழர்கள் மீது பிரயோகித்துச் சோதனை செய்கிறது. அதனைக் கண்டறிய சர்வதேச இராணுவக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார் டாக்டர் வில்சன்.

டாக்டர் வில்சன் கூறிய கருத்துக்களில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரளச் செய்கிறது என்பது தவறான வியாக்கியானம்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இலங்கைத் தமிழர் நலனுக்கு உகந்ததா இல்லையா என்பதுதான் பிரச்சனையாக இருந்ததே தவிர, அந்த ஒப்பந்தம் இந்தியாவின் நலனை பாதுகாத்தது, முக்கியமாக அதற்காகவே ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதே உண்மையாகும்.

உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதிகள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இந்தியப்படை நடவடிக்கைகளை கண்டித்தனர்.

அமேரிக்கப் பிரதிநிதியான திருமதி கரேன் பார்க்கர் மனித உரிமைகளுக்கான சர்வதேச சட்ட நிபுணர்களில் ஒருவர்.

1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-19 ம் திகதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற்ற இலங்கை இனப்பிரச்சனை பற்றிய சர்வதேச மாநாட்டுக்கு தலைமை வகித்தவர்.

உலகத் தமிழர் மாநாட்டில் உரையாற்றிய திருமதி கரேன் பார்க்கர் சொன்னது இது: “பிரபாகரனும் அவருடைய தோழர்களும் போர்க்லையில் தேர்ந்த நிபுணர்கள் என்பதை நிலைநாட்டி விட்டனர்.”

poradamaசர்வதேச அரங்கில் நடந்த போராட்டங்கள்

தீர்மானங்கள்

உலகத் தமிழர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவைதான:;

1. ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைவராகப் பிரபாகரனையும், தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகளையும் அங்கீகரிப்பது.

2. உடனடியாக போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகளை தொடங்குமாறு இந்திய அரசு, இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

3. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கானும் பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாகத் “திம்பு” மாநாட்டில் அனைத்துக் தமிழர் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டு வெளியிட்ட திட்டத்தை ஏற்றுக்கொள்வது,

நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புக்கள் உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

மிக நெருக்கடியான கால கட்டத்தில் நடைபெற்றமையால் இம் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அமைந்தது.

பாரிசில்

1988 மே மாத்தில் பாரிசில் உள்ள புலிகள் இயக்கத்தினரின் முயற்சியால் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.

பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மேதின ஊர்வலத்தின் முன்னணியில் இலங்கைத் தமிழர்கள் சென்றனர்.

ஊர்வலத்தின் காணப்பட்ட காட்சிகள் மக்களின் கவனத்தை கவரும் வகையில் இருந்தன.

தமிழ்ப் பெண்கள் தலை விரிகோலமாக அழுதபடி சென்றனர். இந்தியச் சிப்பாய்கள் போல வேடமணிந்தவர்கள் இருவர் இருபுறமும் செல்ல அவர்கள் மத்தியில் ராஜீவ் காந்தி போல வேடமணிந்தவர் சென்றார். அவர் தனது ஒரு கையில் தமிழ்ப் பெண்னையும், இன்னொரு கையில் துப்பாக்கியையும் பிடித்தபடி சென்றார்.

“இந்திய அமைதிப் படையின் நடவடிக்கை இது தானா?” என்று பிரான்ஸ் மொழியில் எழுதப்பட்ட பெரிய பதாகை ஒன்றும் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டது.

உலகெங்கும் இந்தியத் தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டமையும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இந்தியத் தூதரகங்கள் முதன்முதலில் பரவலாக ஆர்ப்பாட்டங்களை சந்தித்ததும் இந்தியப் படை இலங்கை வந்தபின்னர்தான்.

வெளிநாடுகளில் நடைபெற்ற போராட்டங்கள் புலிகள் அமைப்பினருக்கு உற்சாகம் தரத்தக்கவையாக அமைந்தன.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களையும் படகுகளில் ஏற்றி வந்து இந்தியப்படை நடவடிக்கைகள் தொடர்பாக அம்பலப்படுத்தினார்கள் புலிகள்.

தொடர்ந்த பேச்சுக்கள்

இத்தனைக்கும் மத்தியில் தமிழ்நாட்டில் கிட்டுவுடன் இந்திய “றோ” உளவு அதிகாரிகள் பேச்சு நடத்திக் கொண்டிருந்தனர்.

வன்னியில் மணலாற்றுக் காட்டுக்குள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்போகிறோம் என்றும் மிரட்டினார்கள்.

விமானத் தாக்குதலில் பயன்படுத்தப் போகும் குண்டுகளின் எடையையும் கிட்டுவுக்குக் கூறினார்கள்.

“இவ்வாறான குண்டுகளைப் போட்டால் காட்டுக்குள் இருக்கும் உங்கள் தலைவர் தப்பவே முடியாது.” இது தான் கடைசிச் சந்தர்பபம். ஒப்புக் கொண்டபடி மீதிப் பணத்தையும் தருகிறோம்.

தனிப்பட்ட பாதுகாப்புக்கு உங்கள் இயக்கத் தலைவர்கள் ஆயுதங்களையும் வைத்திருக்கலாம். உங்கள் இயக்கத்திற்கே முன்னுரிமை தரப்படும்.

அதனால் பிரபாகரனிடம் போர் நிறுத்தம் செய்யுமாறு கூறுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தலைமை அழிவது தவிர்க்க முடியாதது” என்று நாசூக்காக மிரட்டினார்கள்.

கேணல் வர்மா என்பவர் கிட்டுவை அடிக்கடி சந்தித்து பிரபாகரனின் முடிவை அறிந்து கொள்ளுமாறு நச்சரித்துக் கொண்டிருந்தார்.

கிட்டுவும் போர் நிறுத்தம் செய்வதுதான் சரி என்ற எண்ணம்தான் இருந்தது.

“இந்திய அரசுடன் தற்போது உடன்பட்டுப் போகலாம். குறிப்பிட்ட அளவு ஆயுதங்களையும் ஒப்படைக்கலாம்.

பின்னர் மீண்டும் இலங்கை அரசுடன் போரிடும் அவசியம் ஏற்பட்டால் இந்திய அரசு இப்போது தரப்போகும் பணத்தை வைத்து ஆயுதம் வாங்கிக் கொள்ளலாம்.” என்று கிட்டு நினைத்தார். அதனையே பிரபாவுக்கும் ஜாடை மாடையாகத் தெரியப்படுத்தினார்.

“இந்தியாவை இனியும் நம்ப முடியாது. தாங்கள் செய்வதாகக் கூறும் விடயங்களை எழுத்து மூலமாக இந்தியா தரமுடியுமா? என்று கிட்டுவிடம் தகவல் அனுப்பினார் பிரபா.

எழுத்து மூலமாக எதனையும் உத்தரவாதப்படுத்த இந்திய உளவுப் பிரிவினரோ, கேணல் வர்மாவோ விரும்பவில்லை.

அதன் பின்னரும் கிட்டு போன்றவர்கள் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டனர். பிரபாவின் மனதையும் மாற்ற முற்பட்டனர்.

புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் சிலரும் கிட்டுவின் கருத்துப்படி செய்தால் பிரபாகரனையும் பாதுகாக்கலாம். இயக்கத்தையும் காப்பாற்றலாம் என்று நினைத்தனர். பிரபாகரனிடமே நேரடியாகப் பேசிப் பார்த்தனர்.

691224991அவர்களிடம் பிரபாகரன் உறுதியான குரலில் தெரிவித்த கருத்து இது:

“நான்  செத்த பின்னர் வேண்டுமானால் யார் வேண்டுமானாலும் இயக்கத்தை மொத்தமாகவோ சில்லறையாவோ விற்றுக்கொள்ளட்டும். நான் உயிரோடு இருக்கும்வரை அது நடக்காது”.

புலிகளை சரணடைய செய்ய இந்தியா விரும்புகின்றது. படைகளை குவித்துவைத்து மிரட்டி பணிய வைப்பதே இந்தியாவின் எண்ணம் என்துதான்  பிரபாகரனின் உறுதியான கருத்தாக இருந்தது.

மணலாற்றுக்காடு இந்திய படைகளின்  கடும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். முற்றுகைக்கு இலக்காகலாம் என்பது பிரபாகரனுக்கு தெரிந்தே இருந்தது.

அதனால் காட்டுப்  போர்முறைக்கு  உறுப்பினர்களை தயார்படுத்தும் பயிற்சிகள் ஆரம்பமாகின.

புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் நடந்து கொண்டிருந்தன. புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்களும் தொடங்கப்பட்டன.

இயக்கங்களின் உதவி

புலிகளை இயக்கத்தினரை ஒழித்துக்கட்ட  ஈ.பி.ஆர்.எல் . எஃப்.. , ரெலொ, ஈ.என்.டி எல். எஃப் ஆகிய மூன்று இயக்கங்களின் உறுப்பினர்களையும்  களத்தில்  இறக்கியது  இந்திய படை.

இந்திய படையினர்களின் அத்துமீறல்களுக்கு சமமாக தம்மக்களையே கொன்று குவிக்கும் கொலை வேட்டைகளை ஆரம்பித்தன இயக்கங்கள்.

மட்டக்களப்பில் மண்ரடூர் கிராமத்தில் புலிகள் இயக்க ஆதரவாளராக இருந்தவர் பாக்கியராசா.

பாக்கியராசாவை  ஈ.பி.ஆர்.எல் . எஃப்..இயக்கத்தினர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். மனைவி கத்திக் குழறினார். எட்டி உதைத்துவிட்டு போனார்கள். 1988 ஏப்பில் 4ம் திகதி பாக்கியராச சுட்டுக்கொல்லப்பட்டார்.

தங்கள்  இயக்கங்களிலிருந்து  ஒதுங்கியிருந்தவர்களை மட்டுமல்ல, தங்களால் நடவடிக்கை எடுத்து விலக்கப்பட்ட  ஒழுக்கம் கெட்டவர்களையும்  ஆட்தேவைக்காக தம்மோடு இணைத்துக் கொள்ள ஆரம்பித்தன இயக்கங்கள்.

இந்தியப்படை காலத்தில் இயக்கங்களின் கொலை, கொள்ளை, மற்றும் ஒழுக்கக்கேடான செயல்கள் தலை விரித்தாடியமைக்கு அதுவும் ஒரு காரணம் எனலாம்.

ltte-members-begin-2உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்: கிழக்கு மகாகாணத்தில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் இந்தியப் படையுடன் ஈ.பி,ஆர.எல்.எப் இணைந்து வந்த போது முன்னணியில் காணப்பட்டவர் கிருபா.

கிருபா என்று அழைக்கப்படும் கிருபாகரன் ஈ.பி.ஆர்,எல்,எப் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்.

காரைதீவில் வங்கி ஒன்றில் பணி புரிந்த கிருபாகரன் அங்கு பணத்தை கையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இயக்கத் தேவைக்காகவே பணத்தை எடுத்ததாக கிருபா கூறினார். ஆனால் இயக்க உறுப்பினர்களிடம் இருந்து கிருபா பணம் வாங்குவாரே தவிர கொடுப்பது கிடையாது.

அது மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் சில இயந்திரத் துப்பாக்கிகள் இருப்பதாகக் கூறி யாழ் மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார் கிருபா.

யாழ் தபாலகத்தில்;;; கொள்ளயடித்த பணத்தைக் கொடுத்தனர். பணத்தைக் வாங்கிச் சென்ற கிருபா பல மாதமாக தொடர்பே கொள்ளவில்லை.

பின்னர் கேட்டபோது கிருபா சொன்ன பதில்: “வேறு யாரோ முந்திக் கொண்டனர் தோழர்!”

“சரி பணம் எங்கே?”

“ஆயுதம் வாங்கச் செல்ல வாகனம் வாடகைக்கு பிடித்ததில் செலாவாகி விட்டது.”

இது நடந்தது 83ல். அப்போது 50 ஆயிரம் ரூபா என்பது பெரிய தொகை .

கிருபாவின் இக்க கையாடலுக்கு இன்னும் சாட்சியாக இருப்போர் ஈ.பி.ஆர்,எல்,எஃப் இல் சுபத்திரன். இவர்கள் தான் கிருபாவிடம் பணம் கொடுத்தவர்கள்.

கிருபாவை கட்சியில் இருந்து நீக்குமாறும் மரண தண்டனை விதிக்குமாறும் ஈ.பி.ஆர்,எல்,எப் அமைப்பில் அன்று இருந்த உளவுப்பிரிவான மக்கள் ஆய்வுப் பிரிவு (MAP) முடிவு செய்தது.

மக்கள் ஆய்வுப் பிரிவின் பொறுப்பாளர் மணி, மக்கள் ஆய்வுப் பிரிவின் தலைமைக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் கிருபாவுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று மத்திய குழுவிடம் கோரினர்.

ஈ.பி.ஆர்,எல்,எப் இயக்கத்தின் மட்டக்களப்பு தளபதி சிவாவும் கிருபாவுக்கு மரணதண்டனை வழங்க அனுமதி கோரினார்.

ஆனால் ஈ.பி.ஆர்,எல்,எப் தலைவர் பத்மநாபா அதனை விரும்பவில்லை. கிருபாவை இந்தியாவுக்கு அழைத்துக் கொள்ளலாம். ஊரில் விட்டு வைத்தால் தானே பிரச்சனை என்று இந்தியாவுக்கு அழைத்தனர்.

பின்னர் ஈ.பி.ஆர்,எல்,எப் இயக்க உட்பிரச்சனை காரணமாக கிருபாவை பயன்படுத்தும் தேவை பத்மநாபாவுக்கு ஏற்பட்டது.

தவறான சக்திகள் என்றாலும் தமது நலனுக்கு சாதகமாக இருந்தால் கண்டு கொள்ளாமல் இருக்கும் போக்கு பிரபாகரன் தவிர்ந்த ஏனைய இயக்கத் தலைவர்கள் அனைவரிடமும் இருந்தது.

சரி, கிருபா பற்றி இந்தளவுக்கு கூறக்காரணம் என்ன?

அந்தக் கிருபாதான் பின்னர் வடக்கு-கிழக்கு மாகாண சபையின் நிதி அமைச்சராக இருந்தார். ஜோக் என்று நினைக்காதீர்கள். இவ்வாறான அனுகுமுறைகளும் ஏனைய இயக்கங்கள்  கெட்டுக் குட்டிச் சுவரானதற்கு ஒரு முக்கிய காரணம்.

இது மட்டுமல்ல புலிகளுக்கும், ஈ.பி.ஆர்,எல்,எப் அமைப்புக்கும் இடையே கிழக்கில் நடைபெற்ற ஒரு சுவாரசியமான சங்கதியையும் கூறுகிறேன்.

(தொடர்ந்து வரும்)
விறுவிறுப்பான அரசியல் தொடர்
எழுதுவது அற்புதன்.
தொகுப்பு கி.பாஸ்கரன்-சுவிஸ்)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.