காத்திருந்த பொலிசாருக்கு தண்ணி காட்டி ஓடி மறைந்த கார் திருடன்!! – நடந்ததை பாருங்கள்- (வீடியோ)

0
596

லண்டன் மோட்டர் வே M4ல் , ஒரு கார் திருடும் நபர் தான் திருடிய காரை ஓட்டி வந்துள்ளார்.

மிகவும் நன்றாக திட்டமிட்டு. ஒரு பாதையில் வைத்து அவனை மடக்கிப் பிடிக்க பொலிசார் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள்.

கார் திருடன் எப்படிச் செல்லவேண்டும். எந்த வழியால் அவன் செல்லவேண்டும் என்பதனை கூட அவர்கள், ஏற்படுத்தினார்கள்.

குறித்த கார் ஒரு இடத்தில் வரும்வேளை. ஸ்ரிங்கர் என்று சொல்லப்படும் அதி நவீன கருவி ஒன்றை வைத்து. அவனது காரை செயலிழக்கச் செய்ய குறித்த கருவியை அங்கே ஏற்கனவே போட்டு பொலிசார் காவல் இருக்க.

இதனை முன் கூட்டியே அறிந்த நபர் போல. குறித்த கார் கள்ளன், அந்த பாதையால் வந்தும். அதே பாதையால் செல்லாமல், அருகில் உள்ள புல் வெளியில் காரை ஓட்டிச் சென்றுவிட்டான்.

இதனால் இலவு காத்த கிளி போல பொலிசார் ஏமாந்தது மட்டுமல்லாது. ஓடிச் சென்று குறித்த கருவையை செயலிழக்கச் செய்யவேண்டியும் இருந்தது.

கார் திருடன் பொலிசாரின் கண்ணில் மண்ணை தூவி தப்பிச் சென்றுவிட்டான். ஒரு கட்டத்தில் அவனை துரத்திப் பிடிக்க கூட அவர்கள் முயற்ச்சி செய்தது பெரும் வேடிக்கையாக இருந்தது என்கிறார்கள் சிலர்.

ஒட்டு மொத்தத்தில் கள்வன் தப்பிவிட்டான். பொலிசார் அவனை மீண்டும் வலை வீசி தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.