கைது செய்யப்பட்டவர்களை “வீடியோ டெக், ரேடியோக்கள், நகைகள் வாங்கிக்கொண்டு விடுதலை செய்த இந்தியப் படையினர்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-124)

0
2022

கைதுகள்

1987ம் ஆண்டு இறுதியிலும் 1988ன் ஆரம்ப பகுதியிலும் இந்தியப் படையினரால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் கைது செய்ய்பட்டனர்.

தகவல்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பிரிவினர்.

இன்னொரு பிரிவினர், இந்தியப் படையினரின் தேவைகளுக்காக கைதுசெய்யப்பட்டனர். அது என்ன தேவை? இந்தியப் படையினரிடம் பிடிபட்ட தமது பிள்ளைகளை மீட்க, பணமாகவும் பொருளாகவும் கொடுக்கவும் பெற்றோர்கள் தயாராக இருந்தனர்.

பணமாக வாங்குவதை விட பொருளாக வாங்குவதில்தான் இந்தியப் படையினர் ஆர்வம் காட்டினார்கள்.

வீடியோ டெக், ரேடியோக்கள், ரேப் ரேடியோக்கள், நகைகள் போன்றவற்றை பெற்றுக் கொண்டு தம்மால் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவித்தனர்.

இவ்வாறு ருசி கண்டதால் புலிகளால் இருக்க முடியாது என்று தமக்கு நன்கு தெரிந்தும் கூட பல இளைஞர்களை இவர்கள் கைது செய்தனர்.

அதே நேரத்தில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரும் இந்தியப் படையினரின் பலவீனத்தைப் பயன்படுத்தி விடுதலையாகிச் சென்றனர்.

டெக்கையோ, விலை உயர்ந்த நகயையோ கொடுத்துது விட்டு நைசாக விடுபட்டுச் செல்வது புலிகள்; இயக்க உறுப்பினர்களுக்கு பெரிய காரியமல்ல.

IPKF7காணாமல் போனோர்

மறுபுறம் கைதாகி காணாமல் போனவர்கள் பட்டியலும் நீண்டு கொண்டிருந்தது.

யாழ்ப்பாணம் அரியாலையில் பொன்னையா காந்தரூபன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்தியப் படையினரின் ஜீப்பைக் கண்டதும் பயத்தில் ஓடியதுதான் காந்தருபன் செய்த குற்றம்.

காந்தரூபனைப் பிடித்துச் சென்ற இந்தியப் படையினர் கூறிய தகவல்கள்தான் ஆச்சரியமானது.

காந்தரூபன் ஒரு புலி என்றும், அவனிடமிருந்து இரண்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பின்னர் அவனது வீட்டில் இருந்தும் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றபட்டதாகவும் கூறினார்கள் இந்தியப் படையினர்.

அவர்கள் அப்படிக் கூறியதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

காந்தரூபனைப் பிடித்துச் சென்றவுடன் இவர் ஒரு புலியாக இருக்கலாம் அதுதான் தம்மைக் கண்டதும் ஓடியிருக்கிறான் என நினைத்து அவனை சித்திரவதை செய்தனர்.

சித்திரவதை தாங்காமல் காந்தரூபன் செத்துப் போனார். அதனால்தான் காந்தரூபனைக் ஒரு புலியாக காட்ட கடுமையான சிரத்தைக் எடுத்துக் கொண்டனர்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற சம்பவங்களில் ஒன்று இது:

அண்ணபூரணம் என்ற தாயாருக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்தவர் இரவீந்திரனைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.

“உன் தம்பிகள் இருவரும் எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டு இரவீந்திரனை சித்திரவதை செய்தனர்.

சித்திரவதை தாங்காமல் துடிதுடித்த இரவீந்திரன் இறந்து போனார்.

பாவம் அன்னபூரணம். மூத்த மகனை இந்தியப் படையினரின் சித்திரவதைக்குப் பலிகொடுத்தார்.

அதன் பின்னர் இளைய மகன் சுதாகரன் இந்தியப் படைச் சுற்றி வளைப்பில் சயனைட் விழுங்கி மரணமானார். அடுத்தவனான பிரபாகரன் இந்தியப் படையோடு நடைபெற்ற மோதலில் பலியானார்.

மூன்று பிள்ளைகளையும் பறி கொடுத்து அன்னபூரணம் என்ற தாய்.

Thamileelam-Police-Chief-B.-Nadesan-e1498094022824தடுப்பு முகாம்கள்

இந்தியப் படையினரின் தடுப்பு முகாம்களுக்குள் இருந்தவர்களும் பயங்கரமான சித்தரவதைகளை அனுபவவித்தனர்.

தலைகீழாக கட்டித் தொங்கவிடுதல், மின்சாரம் செலுத்துதல், கண்களுக்குள் மிளகாய்த்தூள் போடுதல் போன்ற கொடூரமான சித்தரவதைகளுக்கு உள்ளாளார்கள்.

தடுப்பு முகாம்களில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள், உளவியல் ரீதியான சித்திரவரதைகளையும் அனுபவித்தனர்.

உள்ளே இருக்கும் அந்த உறுப்பினர்களை அழைத்து விசாரிக்கும் படை அதிகாரிகள், புலிகள் இயக்கத் தலைவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். “புலிகளை ஒழித்துக்கட்டத்தான் வந்திருக்கிறோம். உங்களை அழித்து விட்டுத்தான் இங்கிருந்து செல்லுவோம்.” என்றும் சூளுரைப்பார்கள்.

இந்தியப்படையின் தடுப்பு முகாமில் இருந்த புலிகள் இயக்கப் பிரமுகரான நடேசன் (தமிழீழக் காவல்துறைப் பொறுப்பாளர்) தன் அனுபவம் பற்றி ஒரு முறை கூறியது இது:

“வெளியே நடப்பதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு மிகக் குறைவு. பத்திரிகைகளும் கொடுக்கப்படுவதில்லை.

அவ்வப்போது இந்தியப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளே வருவபவர்கள் மூலம்தான் ஓரளவு செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. இந்திய இராணுவ அதிகாரிகள் பெரும்பாலானோர் எங்களை மிக மோசமாகவும், கேவலமாகவும் நடத்தினார்கள்.

காரணமேயில்லாமல் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து எங்கள் தலைவர் பிரபாகரனைப் பற்றி மரியாதைக் குறைவான வார்த்தைகளால் திட்டுவார்கள்.

கேரளாவைச் சேர்ந்த ஓர் அதிகாரி ஒருநாள் என்னை அழைத்து, “இந்தியாவில் நெடுமாறன், வீரமணி ஆகிய இரண்டே இரண்டு பேர்தான் உங்களுக்காக………………… கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டால் உங்களுக்கு வேறு நாதி கிடையாது” என்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். சில நேரங்களில் எங்கள் எல்லோரையும் சுட்டுத் தள்ளப்போவதாகவும் அதிகாரிகள் மிரட்டுவார்கள்.

இந்திய இராணுவ அதிகாரிகளில் சில நல்லவர்களும் இருந்தார்கள். எங்கள் அனைவராலும் “மாமா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஒரு அதிகாரி இருந்தார்.

பார்ப்தற்கு பூதம் போல தோற்றமளித்த அவர் மனிதாபிமானம் நிறைந்தவராக இருந்தார். அவர் தென்னாட்டுக் காரர், ஓரளவு தமிழ் பேச தெரிந்தவர். எங்களை அவர் அன்போடும் பரிவோடும் நடத்தினார்.

எமது சிறைவாசத்தின் பிற்பகுதியில் வெளியே நடக்கும் முக்கியமான செய்திகளை அவர் சொல்லுவார்.

அவர் வரும் வேளையை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். எங்களைப் பார்க்க எங்கள் மனைவி மக்கள் வந்தால் அந்தச் செய்தியெல்லாம் முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிப்பார்.

அவரைப் போன்ற அதிகாரிகள், “இந்தப் போர் தேவையற்ற ஒன்று. தமிழர்கள் நமக்கு எதிரிகள் அல்லர். நம்முடைய நண்பர்கள். அவர்களை எதற்காக எதிர்த்துப் போரிட வேண்டும்? “என்று வருத்தப்பட்டு பேசுவார்.

529921_555729581111602_144135945_n-300x208படையினர் வருத்தம்

சில நேரங்களில் எங்களுக்கு காவலாக இருக்கும் இந்திய இராணுவ வீரர்களுடனும் நான் பேசிப் பார்ப்பதுண்டு. அப்போது அவர்களும் இந்தப் போரை விரும்பவில்லை என்பது எனக்குப் புரிந்தது.

இராணுவ அதிகாரிகள் குடித்து விட்டு கூத்தடிப்பதையும், இந்தியாவிலுள்ள தங்களது குடும்பத்தினருடன் மணிக்கணக்கில் தொலைபேசி மூலம் பேசுவது பற்றியும், அதேவேளையில் தாமோ மாதக்கணக்காகியும் கூட தங்களது குடும்பத்தினருக்கு கடிதம் எழுத முடியாமல் இருப்பது பற்றியும் இந்தியச் சிப்பாய் எம்மிடம் அங்கலாய்ப்பதுமுண்டு.

விடுதலைப் புலிகளைப்பற்றிய அச்சமும், மதிப்பும் அவர்களிடம் குடிகொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். எங்கள் தலைவர் பிரபாகரனை மதிப்பிற்குரிய மாபெரும் தளபதியாக இந்தியச் சிப்பாய்கள் போற்றுவதை என்னால் உணர முடிந்தது.

இந்தியப் படையில் அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதை நான் பார்த்தேன்.

அதிகாரிகளுக்கு என்று தனியான உணவு விடுதிகளும் இருந்தன. உணவிலும் வேறுபாடு இருந்தது. இந்த ஏற்றத்தாழ்வைப் பற்றியெல்லாம் இந்தியச் சிப்பாய்கள் எங்களிடம் புலம்புவதுமுண்டு.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அத்தகைய ஏற்றத்தாழ்வு கிடையாது. விடுதலைப் புலிகள் என்ன உணவு உண்ணுகிறார்களோ அதைத்தான் பிரபாகரனும் உண்ணுகிறார். மற்றத்தளபதிகளும் அப்படியே.

சில சமயங்களில் தம் தோழர்களுக்கு உணவைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு தலைவர் பிரபாகரன் பட்டினி கிடந்த நாட்களும் உண்டு என்று நான் அவர்களுக்கு கூறினேன்.

அதனைக் கேட்டதும் அவர்கள் பேராச்சரியம் அடைந்தனர். நான் சொல்லுவதை நம்பமுடியாமல் என்னை திகைப்புடன் பார்த்தார்கள்.” இவ்வாறு நடேசன் தன் அனுபவத்தை கூறியிருந்தார்.

blogger-image-1109447018கைதிகள் விடுதலை

இந்தியப் படையினருடன் நடைபெற்ற யுத்தத்தில் ஆரம்ப கட்டத்தில் இந்தியப் படை 18 பேர் புலிகளால் பிடிக்கப்பட்டனர். வன்னிக் காட்டில் அவர்களை சிறை வைத்திருந்தனர் புலிகள்.

ஆனால் இந்தியப் படையினர் தமது பிரசாரத்தில் வேறுவிதமாகக் கூறினார்கள்.

“தம்மிடமிருந்த 18 இந்தியப் படையினரையும் புலிகள் டயர் போட்டு கொளுத்தி விட்டனர்? என்று பிரசாரம் செய்தனர்.

அந்தப் பிரசாரத்தை முறியடிக்க புலிகள் திட்டமிட்டனர்.

1987ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேசப் பத்திரிகையாளர் முன்பாக 18 இந்தியப் படையினரையும் விடுவித்தனர் புலிகள்.

இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள யாழ்ப்பாணத்திற்குள் அந்த கைதிகளைக் கொண்டுவந்து சேர்த்தவர் மாத்தையா. எப்படி உள்ளே வந்தனர் என்பது பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கைதிகள் விடுவிக்கப்பட்ட இடத்தில் இந்தியப் படை அதிகாரிகளும் இருந்தனர்.

விடுவிக்கப்பட்ட கைதிகளிடம் கேள்விகள் எதுவும் கேட்கக்கூடாது என்று பத்திரிகையாளர்களைத் தடுத்தனர் இந்திய அதிகாரிகள்.

மாத்தையா விடவில்லை.

“ நாங்கள் இவர்களை சித்திரவதை செய்தோமா என்று கேளுங்கள்,” என்ற பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

விடுதலையான படையினரில் ஒருவரான வாமன் சிட்டி என்பவர்: “புலிகள் எங்களை மிக நன்றாகவே நடத்தினார்கள். எங்களை சித்திரவதை செய்யவில்லை” என்று கூறினார்.

உடனே மாத்தையா மற்றொரு காரியம் செய்தார்.

தன்னிடமிருந்த புகைப்படங்களை அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களிடம் விநியோகித்தார்.

இந்தியப் படையின் படுகொலைகள் பற்றிய புகைப்படங்கள் அவை.

பத்திரிகையாளர்களுக்கு ஏக குஷிபாய்ந்து புகைப்படங்களை வாங்கிக் கொண்டனர்.

இந்தியப் படை அதிகாரிகள் அதனை எதிர்பார்க்கவில்லை. செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

புகைப்படங்களை கொடுத்துவிட்டு கையசைத்தபடியே புலிகளும் மாத்தையாவும் மின்னல் வேகத்தில் சென்றுவிட்னர்.

அதன் பின்னர்தான் இந்தியப் படை அதிகாரிகள் பத்திரிகையார்களிடம் தங்கள் வேலையை காட்டினார்கள்.

புகைப்படங்களை எங்களிடம் தாருங்கள். அப்படித்தராவிடால் இனிமேல் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு உங்களை அழைத்து வரமாட்டோம்” என்று கூறினார்கள். அதனால் பத்திரிகையாளர்கள் தம்மிடமிருந்த புகைப்படங்களை திருப்பிக் கொடுத்து விட்டனர்.

(தொடர்ந்து வரும்)

எழுதுவது அற்புதன்
தொகுப்பு: கி.பாஸ்கரன்

32790எம்.ஜி.ஆரின் கண்கள் அப்போது கசிந்தன

தமிழக முதவ்லர் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளுக்கு பெரும் உதவிகள் செய்திருக்கிறார். அவை பற்றி அரசியல் தொடரில் விபரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் நாட்டில் தற்போது புலிகளின் தீவிர ஆதரவாளராக இருக்கும் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் பழ-நெடுமாறான் நினைவு கூர்ந்துள்ள சில சம்பவங்கள் இவை:

1987ம் ஆண்டு மே நாளில் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை எம்.ஜி.ஆர் அறிவித்தார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நாலுகோடி ரூபாய்களும்(இலங்கைப் பெறமதியில் கிட்டத்தட்ட எட்டுக்கோடி ரூபாய்கள்) புலிகளின் தோழமை இயக்கமான ஈரோஸ் இயக்கத்திற்கு ஒரு கோடி ரூபாய்களும் கொடுப்பதாக அவர் அறிவித்த செய்தி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இலங்கை அரசு கண்டனம் தெரிவித்தது. தமிழ் நாட்டில் உள்ள சில பத்திரிகைகளும் எம்.ஜி.ஆரைக் கண்டித்தன. “றோ” உளவு அமைப்பு ஆத்திரமடைந்தது. தடுத்து நிறுத்த முயற்சி செய்தது.

நானும், வீரமணியும் எம்.ஜி.ஆரின் நடவடிக்கையை வரவேற்று அறிக்கை கொடுத்தோம்.

நாலு கோடி ரூபாய் மட்டுமன்றி அதற்கு முன்னும் பின்னுமாக தனது இறுதிக் காலம் வரை மேலும் பல கோடி ரூபாய்களை எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளுக்கு வாரிவாரி வழங்கினார். ஆனால் அதைக்குறித்து அவர் ஒருபோதும் விளம்பரம் தேடிக் கொண்டதில்லை.

1987 ஆகஸ்ட் நாலாம் திகதி எம்.ஜி.ஆர் அவருடைய தோட்;டத்தில் நானும் வீரமணியும் சந்தித்தோம்.

மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவரைச் சந்தித்தால், அவருடைய உடல் நிலையைப் பார்த்துப் பதறிப்போனாம். அவரும் உணர்ச்சிவசப்பட்டார்.

“என்ன விடயம்?” எனச் சைகையின் மூலம் அவர் கேட்டபொழுது விபரங்களைக் கூறினேன். இலங்கை-இந்திய ஒப்பந்தம் பற்றிய எங்கள் ஐயங்களை எடுத்து விளக்கினோம்.

இறுதியாக அவரிடம் பின்வருமாறு கூறினேன்.

“கால் நூற்றாண்டு காலதிற்கு மேல் தமிழ் திரைப்படத் துறையில் கொடிகட்டிப்பறந்திருக்கிறீர்கள். இது மட்டும் வரலாற்றில் நிலையான இடத்தை உங்களுக்குப் பெற்றுக் கொடுத்துவிடாது.

உங்களுக்கு முன்பும் பல நடிகர்கள் திரையுலகில் அழியாத புகழ் பெற்றிருக்கிறார்கள். உங்களுக்குப் பின்பும் எத்தனையோபேர் திரையுகில் மின்னக்கூடும்.

உங்களுக்கு முன்பாகப் பலர் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். உங்களுக்குப் பின்பும் பல முதலைச்சர்கள் அரசோச்சுவார்கள். ஆனால் உங்களுக்கு முன்போ, பின்போ முதலமைச்சர்களாக இருந்தவர்களுக்கோ, இருக்கப் போகிறவர்களுக்கோ கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.

உங்கள் காலத்தில் ஈழத் தமிழர்கள் விடுதலைப் பெறப் ரோடினார்கள். நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து தமழீழம் அமையக் காரணமாக இருந்தீர்கள் என்பதுதான் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் இதைச் சொல்லவே வந்தேன்” என்றேன்.

நான் பேசப் பேச அவர் உணர்ச்சிவசப்பட்டார். ஏதோ பதில் கூற முயன்றார். அவரால முடியவில்லை. எனது கைகளை இழுத்து அவருடைய நெஞ்சில் வைத்துக் கொண்டு தன் கைகளால் நெஞ்சில் தட்டிக் கட்டினார்.

அவ்வாறு செய்யும்போது அவருடைய கண்கள் கசிந்தன. எனக்கும் வீரமணிக்கும் கண்கள் பனித்தன.

அவர் என்ன சொல்ல முயன்றார் என்பது எங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும், ஓரளவு புரிந்தது.

பின்னர் சிற்றூண்டி கொண்டுவரச் சொல்லி, அவரும் எங்களுடன் உண்டார்.

06-1481014077-jayalalitha-magr3-600எம்.ஜி.ஆர் மறைந்தபோது பிரபாகரன் அனுப்பி வைத்த செய்தி அது.

ஈழத்தில் தமிழனம் அநாதையாக ஆதரவின்றிக் தவிர்த்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதுணையாய் நின்ற புரட்சித் தலைவனே.

தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல்வீரனே. தங்கள் இழப்பு வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்களின் மார்பில் தீமூட்டுவது போலுள்ளது.”

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.