நம் எதிரிகளை எரித்து கொல்லுங்கள்” கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட பாக்தாதி உத்தரவு

0
782

நம் எதிரிகளை எரித்து கொல்லுங்கள்” கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட ஐ.எஸ் இயக்க தலைவர் பாக்தாதி உத்தரவிட்டு உள்ளார்.

ரஷ்ய ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஐ.எஸ் தலைவர் அல் பாக்தாதி பேசியதாக கூறப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி பேசியதாகக் கூறப்படும் ஒலிப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில்  ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது.

ஈராக்கில் அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்து இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய பகுதியான மொசூல் நகரம் சமீபத்தில் மீட்கப்பட்டது.

சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியும் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவருமான அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதை குர்த் மக்கள் படையும், அமெரிக்காவும் மறுத்தன. அவன் சிரியாவின் ரக்கா பகுதியில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அல் பாக்தாதி ஒரு முறை மட்டுமே பகிரங்கமாக வெளியில் வந்துள்ளான்.

இந்நிலையில், ஐ.எஸ்., சமூக வலைதளங்களில் அல் பாக்தாதியின் பேச்சு பதிவான ஆடியோ, சி.டி., ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவன் கூறியிருப்பதாவது:

ஐ.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்களான நீங்கள்தான், இஸ்லாத்தின் பாதுகாவலர்கள். இஸ்லாத்தை காப்பாற்றும் வீரர்கள்.

தோல்வியை கண்டு துவள வேண்டாம். உங்கள் தாக்குதலை தீவிரப்படுத்துங்கள். போர்க்களத்தில், நம்பிக்கையுடன் களமிறங்குங்கள். இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும் பத்திரிகைகள், ‘டிவி சேனல்கள்’ போன்ற மீடியா மையங்கள் உட்பட நம் எதிரிகளை எரித்து கொல்லுங்கள்.

மொசூலில் நம் வெற்றிக் கொடி மீண்டும் பறக்கும். இஸ்லாமிய மைந்தர்கள், அல்லாவுக்காக தங்கள் உயிரையும் உடலையும் தொடர்ந்து தியாகம் செய்வார்கள்.

குறித்த ஒலிப்பதிவில் பேசும் ஆண் குரல், மோசூல் நகரில் நடந்த யுத்தம், வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா விடுத்துவரும் மிரட்டல்கள் உள்ளிட்டவை குறித்து கருத்துத் தெரிவிக்கின்றது.

சுமார் 45 நிமிடங்கள் நீடிக்கும் குறித்த ஒலிப்பதிவு இணையதளங்களில் பதிவேற்றப்பட்டிருக்கிறது.

ஈராக்கிலும், சிரியாவிலும் நடந்துவரும் சண்டைகளில் பாக்தாதி கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி ரஷ்ய ராணுவத்தின் வான்வழி தக்குதலில் பாக்தாதி கொல்லப்பட்டதாக சில ராணுவ அதிகாரிகளும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஐ.எஸ் அமைப்பு இதுவரை அவரது மரணத்தை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.