தொடருந்தில் பிக்கு ஒருவர் யுவதியுடன் சல்லாபம்!! ; பௌத்தர்கள் பாய்ச்சல்! (காணொளி)

0
221

இளம் பௌத்த பிக்கு ஒருவர் ஓடும் தொடருந்தில் பயணம் செய்தவாறே யுவதி ஒருவருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட  சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள முக்கிய  ஊடகம் ஒன்றின் சமூக வலைத்தளமூடாகவே பகிரப்பட்டுள்ளது.

குறித்த நபர் பயணம் செய்த தொடருந்து எந்த பிரதேசத்திற்குச் செல்லும் தொடருந்து எனத் தகவல்கள் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை.

அந்த இளம் பிக்கு இரு யுவதிகளுக்கிடையில் அமர்ந்திருந்து அதில் ஒரு யுவதியின் கையைப் பிடித்தவாறு அங்கதாபத்தில் ஈடுபட்டுள்ளார்.

அருகில் வேறு இரண்டு பெண்கள் மற்றும் அவர் எதிரே அமர்ந்து படம் எடுக்கும் நபர் என பலர் இருந்தும் எதையுமே பொருட்படுத்தாமல்  குறித்த  பிக்குவும்  யுவதியும் இவ்வாறு நடந்துகொண்டமை பரவலாகப் பேசப்பட்டுவரும் விடயமாக மறிவிட்டது.

இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்யும் போது பிக்குமாருக்கு அருகில் பெண்கள் அமரக் கூடாது. அவ்வாறு தெரியாமல் யாரும் இருந்தால் பேருந்தில் பயணம் செய்பவர்களே எழும்பச் சொல்லி விடுவார்கள்.

இது இந்த நாட்டின் எழுதப்படாத சட்டம், இவ்வாறிருக்க இந்த பிக்குவின் கீழ்த்தனமான செயல் புத்த சாசனத்திற்கே அவமானமென சமூக வலைத்தளங்களில் ஒருசாரார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ”பௌத்த ஒழுக்கங்களை மீறி இந்தப் பேய் நடந்துகொண்டுள்ளதால் பிக்குவாக இருக்கத் தகுதியற்றது. ஒழுக்கத்தோடு இருக்கக் கஸ்டமெனில் எதற்காக பிக்குவாக மாறியது?” எனவும் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.